மின் கட்டணத்தை குறைக்க எளிமையான 3 வழிகள்!!

Photo of author

By Gayathri

மின் கட்டணத்தை குறைக்க எளிமையான 3 வழிகள்!!

Gayathri

3 Simple Ways to Reduce Electricity Bill!!

மின் கட்டண உயர்வானது தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில் மின்சார கட்டணத்தை குறைப்பதற்காக எளிமையான மூன்று வழிகள் குறித்து இந்த பதிவில் காண்போம். பொதுவாக வீட்டில் சேமிப்பு என்பதை மேற்கொள்வது மிக மிக அவசியம் ஆனால் இந்த மின்கட்டண உயர்வால் சேமிப்பை தாண்டி செலவ அதிகரித்துக் கொண்டே போகிறது என வருத்தப்படுபவர்களுக்கு இது மிகவும் உதவும்.

மின்சாரத்தை சேமிக்க மற்றும் மின்கட்டணத்தை குறைக்க 3 எளிமையான வழிகள் :-

1 .A/C பதிலாக இன்வெர்ட்டர் A/C :-

ஏசிக்கு பதிலாக இன்வெர்ட்டர் ஏசி பயன்படுத்தும் பொழுது மின் கட்டணமானது குறைவாக பயன்படுத்தப்படுகிறது. கோடைக்காலம் வர உள்ள நிலையில், வீட்டில் ஏசி வைத்திருப்பவர்கள் அந்த ஏசி களுக்கு பதிலாக இன்வெர்ட்டர் ஏசியை பயன்படுத்தும் பொழுது அந்த இன்வெர்ட்டர் ஏசியானது மின்சாரத்தை மிகக் குறைந்த அளவை எடுத்துக் கொள்வதால் மின்சாரத்தை சேமிக்க மற்றும் மின்கட்டணத்தை குறைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 . மின்விசிறி பயன்பாடு :-

இதை நாம் அனைவரும் அறிந்த விஷயமாக இருந்தாலும் அதனை பயன்படுத்துவதில் இதை நாம் அனைவரும் அறிந்த விஷயமாக இருந்தாலும் அதனை செயல்படுத்துவதில் நமக்கு ஏதோ ஒரு சலுப்பு இருந்து கொண்டு தான் இருக்கிறது. பயன்பாட்டு நேரத்தை தவிர பிற நேரங்களில் மின்விசிறியை அனைத்து வைத்தல் என்பது மிக மிக முக்கியமான ஒன்று. வீட்டை விட்டு வெளியே செல்லும் பொழுது அல்லது அறையை விட்டு வெளியே செல்லும் பொழுது தேவையற்ற ஓடிக் கொண்டிருக்கும் மின்விசிறியை அனைத்து வைத்தல் முக்கியம்.

3 . மைக்ரோவேவ் ஓவன் :-

இதுபோன்ற எலக்ட்ரிக் மெஷின்கள் ஆனது தயார் நிலையில் இருக்கும்பொழுது கூட அதிக அளவில் மின்சாரத்தை எடுத்துக் கொள்வதால் மின்கட்டணம் அதிக அளவில் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. பயன்படுத்தும் பொழுது மட்டுமே மைக்ரோவேவ் ஓவன் போன்ற எலக்ட்ரிக் சாதனங்களை ஆன் செய்துவிட்டு வேலை முடிந்தவுடன் ஆப் செய்து விட வேண்டும்.

இவற்றை கடைபிடித்தாலே உங்களுடைய மின்சார கட்டணமானது பாதியளவு குறைந்துவிடும். அதோடு கூடவே உங்களுடைய எதிர்கால சந்ததியினருக்கு மின்சாரமானது சேமிக்கப்படும். இப்பொழுது இருக்கக்கூடிய காலகட்டத்தில் மின்சாரத்தை சேமிப்பதும் மின் கட்டணத்தை குறைப்பதும் மிக மிக முக்கியமான காரியம் ஆகும்.