ஆப் மூலம் ஓரினச்சேர்க்கைக்கு இணைந்த 3 வாலிபர்! நடு காட்டில் G pay வின் ரகசிய எண்ணால் வந்த வினை!    

Photo of author

By Rupa

ஆப் மூலம் ஓரினச்சேர்க்கைக்கு இணைந்த 3 வாலிபர்! நடு காட்டில் G pay வின் ரகசிய எண்ணால் வந்த வினை!

திருப்பூரில் ஆஷார் என்ற பகுதியில் பனியன் நிறுவனம் ஒன்று செயல்பட்ட வருகிறது அந்த நிறுவனத்தில் கோபிகிருஷ்ணன் என்பவர் பல ஆண்டுகாலமாக சூப்பர்வைசராக பணியாற்றி வரும் வேளையில் இவர் தனது மனைவியுடன் சண்டையிட்டு தனியாக வாழ்ந்து வருகிறார்.

இவ்வாறு இருக்கும் பட்சத்தில் இவர் ஓர் ஓரினச்சேர்க்கை செயலி உபயோகப்படுத்தி இவருக்கு இணையான நபரை தேடி உள்ளார். அந்த செயலியில் இவருக்கு இணையாக பிள்ளையார் பட்டியை சேர்ந்த விக்னேஷ், மருத பாண்டி என்பவர் ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர்.

பின்னர் அந்த இருவரும் சூப்பர்வைசர் கோபி கிருஷ்ணனை எடிசன் நகரில் உள்ள காட்டுப்பகுதிக்கு வரும்படி தெரிவித்ததை அடுத்து கோபி கிருஷ்ணனும் அங்க சென்றுள்ளார்.மூவரும் சேர்ந்து மது அருந்திவிட்டு ஒருவர் பின் ஒருவராக ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனர். பிறகு அந்த இரு வாலிபர்களும் சூப்பர்வைசர் கோபி கிருஷ்ணரிடம் ஓரினச்சேர்க்கை இருந்ததால் ரூ.17,000 தரும்படி கேட்டுள்ளனர்.

கோபி கிருஷ்ணன் பணம் தர விருப்பம் இல்லாததால் google pay-யில் மூன்று முறையும் பணம் அனுப்பும் எண்ணை தவறாக போட்டுள்ளார்.இதனால் கோபமடைந்த அந்த வாலிபர்கள் அங்கிருந்து மது பாட்டிலால் கோபிகிருஷ்ணனை தலையால் அடித்தும் வயிற்றில் குத்தியும் சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்பு சூப்பர்வைசர் கோபி கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.

இதனை கண்ட அங்குள்ளவர்கள் சூப்பர்வைசர் கோபி கிருஷ்ணனை உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இவர் முன்பே இறந்து விட்டதாக தெரிவித்ததையடுத்து,உடனடியாக அங்கிருந்த மக்கள் வேலம்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவலை அறிந்த வந்த போலீசார் இது குறித்து விசாரணை செய்ததில் கோபி கிருஷ்ணன் கொலை செய்தது விக்னேஷ், மருத பாண்டி என்பது தெரிய வந்தது. ஓரினச்சேர்க்கையில் மூவரும் ஈடுபட்டு  பணம் கொடுக்காததால் இருவரும் சேர்ந்து கோபி கிருஷ்ணனை கொலை செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ளனர். அவர்கள் இருவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் அவர்களை கைது செய்து உள்ளனர்.