திருவண்ணாமலைக்கு செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு! புதிய கட்டுப்பாடுகள் அமல்!

0
113
Attention devotees going to Tiruvannamalai! New restrictions apply!
Attention devotees going to Tiruvannamalai! New restrictions apply!

திருவண்ணாமலைக்கு செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு! புதிய கட்டுப்பாடுகள் அமல்!

திருவண்ணாமலையில் இன்று மகாதீபம் நடைபெறுவதை ஒட்டி ஆயிரக்கணக்கான மக்கள் அதனை காண வருவது வழக்கம். அவர்களின் வருகைக்காக தமிழக அரசு 500க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளை இயக்கி உள்ளது.

கொரோனா பெருந்தொற்று அடுத்து தற்பொழுது தான் மக்கள் மத்தியில் மகாதீபம் ஏற்றப்பட்டு அதனை மக்கள் காணவும் அனுமதி அளித்துள்ளனர் மீண்டும் தொற்று பரவாமல் இருக்கவும் மக்கள் கூட்ட நெரிசலை சமாளிக்கும் விதத்தில் புதிய நடைமுறையை அமல்படுத்தியுள்ளனர்.

அந்த வகையில் திருவண்ணாமலையில் மகாதீபம் காண முதலில் வரும் 2500 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்த நிலையில், அதற்கான பாஸ் இன்று காலை முதல் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த பாஸ் ஆனது ஓர் கல்லூரியில் வழங்கப்படும்.மக்கள் பலர் இதனை வாங்க வந்து கொண்டே இருக்கின்றனர். முதல் முறையாக புகைப்படம் அச்சடிக்கப்பட்ட பாஸ் வழங்கப்படுகிறது. மேலும் மலையேறும் பக்தருக்கு பலவித கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டு உள்ளனர்.

மலை ஏறுபவர்கள் கட்டாயம் ஒருவருக்கு ஒரு தண்ணீர் பாட்டில் என்ற கணக்கில் தான் எடுத்து செல்ல வேண்டும் எனவும், மேலே எடுத்துச் செல்லும் நெய், எண்ணெய் போன்றவை குறிப்பிட்டுள்ள இடத்தில் மட்டுமே ஊற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். அதேபோல தீப்பற்ற கூடிய விதத்தில் இருக்கும் பட்டாசு போன்ற பொருட்களை எடுத்து செல்லக்கூடாது எனவும் கூறியுள்ளனர்.

மேலும் மலை விட்டு கீழே இறங்கும்பொழுது அவரவர் எடுத்துச் செல்லும் தண்ணீர் பாட்டில்களை சரியான முறையில் கொண்டு வந்து குப்பைத் தொட்டியில் மட்டும் போடும் படியும் அதை தவிர்த்து மலையில் போடக்கூடாது என்றும் எச்சரித்துள்ளனர்.