மோசடியான முறையில் சிம்கார்டு பெற்றால் 3 ஆண்டுகள் சிறை! மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு!

Photo of author

By Sakthi

மோசடியான முறையில் சிம்கார்டு பெற்றால் 3 ஆண்டுகள் சிறை! மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு!

மோசடியான முறையில் சிம்கார்டு பெறும் நபர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் அல்லது 50 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்கள் தற்பொழுது தெரிவித்துள்ளார்.

தற்பொழுது இந்தியாவில் பிரபலமான தொலைதொடர்பு நிறுவனங்களாக அதாவது சிம்கார்டு சேவைகளை வழங்கும் நிறுவனங்களாக ஏர்டெல், ஜியோ, பி.எஸ்.என்.எல், விஐ ஆகிய நிறுவனங்கள் உள்ளது. இந்த நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்க பல வகையான டேட்டா சேவைகளை வழங்கி வருகின்றது. அதே போல சில சமயங்களில் வாடிக்கையாளர்களின் உண்மையான தகவல்களை பெறாமல் சிம்கார்டுகளை வழங்கியும் வருகின்றது.

இதனால் பலவிதமான மோசடியான சம்பவங்கள் நடக்கின்றது. இதை தடுக்க தற்பொழுது புதிய மசோதா ஒன்று குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. அதாவது சிம்கார்டுகளை வழங்கும் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் பயோமெட்ரிக் விவரங்களை பெறாமல் சிம்கார்டுகளை வழங்க வேண்டும். மோசடியான முறையிலோ அல்லது ஆள்மாறாட்டம் ஆகிய முறையில் சிம்கார்டு பெறப்பட்டால் 3 ஆண்டுகள் சிறை அல்லது 50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

இந்த மசோதா மீதான விவாதத்திற்கு நேற்று(டிசம்பர்20) மக்களவையில் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பெரும்பாலான அமைச்சர்கள் மக்களவையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் அவர்களால் பங்கேற்க முடியவில்லை. பிஜூஜனதா தள கட்சியின் எம்.பி பர்த்ருஹரி மஹதாப், பாஜக கட்சியின் எம்.பி ஜெயந்த் சின்ஹா, சிவ சேனை கட்சியின் எம்.பி ஸ்ரீரங் அப்பா பர்னே ஆகிய அமைச்சர்கள் இந்த விவாதத்தில் கலந்து கொண்டனர்.

இதைத் தெரிந்து இந்த மசோதா தொடர்பாக பேசிய மத்திய அமைச்சர் அஸ்விணி வைஷ்ணவ் அவர்கள் “மக்களவையில் புதிய மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அதாவது தொலைதொடர்பு சாதனங்களை மோசடியான முறையில் பயன்படுத்துவதை தடுக்க மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த வகையில் தவறான முறையில் சிம்கார்டு பெறப்பட்டால் அவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு சிறை தண்டனை வழங்கப்படும். அல்லது 50 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.

தற்பொழுது நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா இணையத்தின் மூலமாக ஏற்படும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளை கையாள்வதற்கான சட்ட அமைப்பு முறையை இந்த மசோதா வலுவாக்கும். இந்த மசோதா தொலைதொடர்பு துறையில் அமைப்பு ரீதியான சீர்திருத்தங்களை ஊக்குவிக்கும். மிகவும் பழமை வாய்ந்த இந்திய தந்தி சட்டம் முதலிய இரண்டு சட்டங்களையும் இந்த மசோதா ரத்து செய்யும்” என்று கூறினார்.