டிசம்பர் 26ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யும்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

0
216
#image_title

டிசம்பர் 26ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யும்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வரும் டிசம்பர் 26ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் டிசம்பர் மாதத்தின் தொடக்கத்தில் சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதிலிருந்து சென்னை படிப்படியாக மீண்டு வரும் நிலையில் தற்பொழுது தென் மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை ஆகிய சில மாவட்டங்களில் கன மழை பெய்து வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் 26ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் தற்பொழுது வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகின்றது. இந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சியானது கிழக்கு காற்றை இழுத்துக் கொண்டிருக்கின்றது.

இதன் காரணமாக இன்று அதாவது டிசம்பர் 21ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதே போல புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அது மட்டுமில்லாமல் நாளை முதல் அதாவது டிசம்பர் 22ம் தேதி முதல் டிசம்பர் 26ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று(டிசம்பர்21) மற்றும் நாளை(டிசம்பர்22) ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. பெரும்பாலும் வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளிக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலியில் மாவட்டத்தில் ஊத்து பகுதியில் 50 மிமீ மழை பெய்துள்ளது. அதே போல நாலுமுக்கு பகுதியில் 40 மிமீ மழையும் காக்காச்சி பகுதியில் 40 மிமீ மழையும் மாஞ்சோலை பகுதியில் 30 மிமீ மழையும் பெய்துள்ளது.

மேலும் தெற்கு குமரிக்கடல் பகுதியில் இன்று அதாவது டிசம்பர் 21ம் தேதி மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.