இன்றைய இளைஞர்கள் இளம் வயதிலேயே ஆண்மை சம்பந்தப்பட்ட பாதிப்புகளை அதிகம் சந்தித்து வருகின்றனர்.இதில் இருந்து தங்களை காத்துக் கொள்வதற்கான தீர்வு இங்கு சொல்லப்பட்டுள்ளது.
தீர்வு ஒன்று:
குங்குமப் பூ – சிட்டிகை அளவு
பால் – ஒரு கிளாஸ்
அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பசும் பால் ஊற்றி சூடுபடுத்துங்கள்.பிறகு அதில் சிட்டிகை அளவு குங்குமப் பூ போட்டு கொதிக்க வைத்து பருகினால் ஆண்மை அதிகரிக்கும்.
வயதாகும் போது சந்திக்கும் சரும சுருக்கம்,மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட இந்த குங்குமப் பூ பாலை குடிக்கலாம்.
தீர்வு இரண்டு:
சிலாஞ்சி பொடி – சிட்டிகை அளவு
தேன் / நெய் – ஒரு தேக்கரண்டி
நாட்டு மருந்து கடையில் சிலாஞ்சி பொடி கிடைக்கும்.தங்களுக்கு தேவையான அளவு வாங்கிக் கொள்ளுங்கள்.
பிறகு இந்த சிலாஞ்சி பொடியில் சிட்டிகை அளவு எடுத்து தேன் அல்லது நெயில் கலந்து சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும்.விந்தணு குறைபாடு பிரச்சனை இருப்பவர்கள் இந்த சிலாஞ்சி பொடியை எடுத்துக் கொள்ளலாம்.
தீர்வு மூன்று:
புளியங்கொட்டை பொடி – ஒரு தேக்கரண்டி
பால் – ஒரு கிளாஸ்
அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பசும் பால் ஊற்றி சூடுபடுத்திக் கொள்ளுங்கள்.பிறகு ஒரு தேக்கரண்டி அளவு புளியங்கொட்டை பொடி போட்டு கொதிக்க வைத்து குடித்தால் ஆண்மை பன்மடங்கு அதிகரிக்கும்.
தீர்வு நான்கு:
அஸ்வகந்தா பொடி – ஒரு தேக்கரண்டி
பால் – ஒரு கிளாஸ்
நாட்டு மருந்து கடையில் அஸ்வகந்தா பொடி கிடைக்கும்.இந்த பொடியை வாங்கி வாருங்கள்.பிறகு ஒரு கிளாஸ் பாலை கொதிக்க வைத்து அதில் இந்த அஸ்வகந்தா பொடியை போட்டு கொதிக்க வைத்து பருகினால் ஆண்மை அதிகரிக்கும்.
தீர்வு ஐந்து:
நெல்லிக்காய் – ஒன்று
தேன் – ஒரு தேக்கரண்டி
முதலில் ஒரு பெரிய நெல்லிக்காயை எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.
இந்த நெல்லிக்காய் சாறில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து பருகினால் ஆண்மை பிரச்சனை நீங்கும்.உடல் வலிமை அதிகரிக்க தாம்பத்திய உறவு சிறக்க இந்த நெல்லிக்காய் பானத்தை பருகி வரலாம்.