பால் கலப்படமானதா என்பதை தெரிந்துகொள்ள 30 நொடி போதும்!! எப்படி தெரியுமா?
இன்றைய காலகட்டத்தில் நாம் சாப்பிடும் அனைத்து உணவு பொருட்களிலும் ஏதோ ஒன்றை சேர்த்துக்கொண்டே வருகிறோம். அதிலும் குறிப்பிட்டு சொல்லப்போனால் தீங்கு விளைவிக்க கூடிய அதிக உணவுப் பொருட்களையே சாப்பிட்டு வருகிறோம்.
நாம் கடைகளில் வாங்கப்படும் அனைத்து பொருட்களும் தூய்மையானது கலப்படம் இல்லாதது என்று கூறிவிட முடியாது சில கலப்படமான பொருட்களும் உள்ளது.
அதிலும் இப்போதெல்லாம் குழந்தைகள் குடிக்கும் பாலில் கூட கலப்படம் செய்து விடுகிறார்கள். சிறு குழந்தையாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு அதிகளவு எதிர்ப்பு சக்தி இருக்க இயலாது அதனால் பால் போன்ற ஊட்டச்சத்து பொருட்களை உட்கொள்வதன் மூலம் அவர்களின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும் அவ்வாரு எதிர்ப்பு சக்தி தரும் பாலிலே கலப்படம் செய்து விடுகிறார்கள்.
இப்போது நீங்கள் வாங்கப்படும் பால் கலப்படம் ஆனதா இல்லை தூய்மையான பாலா என்று அறிய வெறும் 30 நொடிகள் மட்டுமே போதும்.
முதலில் ஒரு டெஸ்ட் டியூபை எடுத்துக் கொள்ளவும் அதில் 5 எம் எல் வாங்கப்பட்ட அந்த பால் மற்றும் அதே அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும். கலங்கிய அந்த பாலில் அதிக அளவு நுரை ஏற்பட்டிருந்தால் அந்த பாலில் சோப்பு கலக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.
நீங்கள் குடிக்கும் பாலில் ஏதாவது வேதிப்பொருட்களை சேர்த்து உள்ளார்களா என்பதை அறிந்து கொள்ள முதலில் அயோடின் டின்சர் என்ற சொல்யூஷனை எடுத்துக் கொள்ளவும் பின்பு நாம் வாங்கிய அந்த பாலில் இதனை இரண்டு அல்லது மூன்று துளிகள் விட்டு கலக்கவும். கலங்கிய அந்தப் பால் வெள்ளை நிறத்திலேயே இருந்தால் அதில் எந்தவித கெமிக்கல்ஸ் சேர்க்கப்படவில்லை என்றும் நிறம் மாறி இருந்தால் அதில் நமக்கு தீங்கு விளைவிக்க கூடிய பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கலப்படமான இந்த பாலின் மூலம் உலகில் 87 சதவீதம் நோய்வாய்ப்பட்டு இருக்கிறார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
கலப்படமான பாலை குடிப்பதன் மூலம் வாந்தி வயிற்றுப்போக்கு டைரியா உள்ளிட்ட பல பிரச்சனைகள் வருகின்றது.
அதேபோன்று கலப்படமான உப்பை நாம் சாப்பிடுவதன் மூலம் கிட்னி பிரச்சனை போன்றவை வருகின்றது.
உப்பு கலப்படமானதா இல்லை தூய்மையானதா என்று அறிய ஒரு உருளைக்கிழங்கை எடுத்து இரண்டு துண்டுகளாக வெட்டி அதில் நாம் வாங்கப்பட்ட அந்த உப்பை அந்த உருளைக்கிழங்கின் மேல் வைத்து சில துளி அயோடினை சேர்த்து அது நிறம் மாறினால் நாம் வாங்கப்பட்ட அந்த உப்பு தூய்மையாக உள்ளது என்றும் நிறம் மாறவில்லை என்றால் அது கலப்படமானது என்பதையும் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
அடுத்தபடியாக மிளகு கலப்படமானதா என்பதை அறிய ஒரு கிளாஸ் தண்ணீரில் நாம் வாங்கப்பட்ட மிளகுயை சேர்க்கவும் மிளகு தண்ணீரின் கீழ் புறத்தில் இருக்கிறது என்றால் அது தூய்மையான மிளகு என்றும் தண்ணீரின் மேற்புறத்தில் மிதக்கின்றது என்றால் அது மிளகுயை போன்று உள்ள பப்பாளி விதைகள் ஆகும்.
இவ்வாறு கலப்படமான மிளகை சாப்பிட்டு வந்தால் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும்.
இவ்வாறு நாம் வாங்கப்பட்ட பொருள் கலப்படமானது என்று தெரிந்து கொண்டால் நீங்கள் முதலில் என்ன செய்ய வேண்டும் என்றால் 9444042322 என்ற whatsapp எண்ணிற்கு கலப்பிடம் செய்யப்பட்ட அந்தப் பொருளை போட்டோவாகவும் வீடியோவாகவும் அல்லது ஆடியோவாகவும் அனுப்பினால் போதும். இதன்மூலம் food safety and standards authority of India கலப்படம் செய்யப்பட்ட அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கும்.
அந்த நிறுவனம் முதல் தடவை கலப்பிடம் செய்கிறது என்றால் அந்நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.
இரண்டாவது தடவை கலப்பிடம் செய்கிறது என்றால் அந்நிறுவனத்திற்கு ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் நிறுவனத்தின் மீது சீலும் வைக்கப்படும்.
இந்த தவறை அந்நிறுவனம் மூன்றாவது முறையாக செய்கிறது என்றால் அந்நிறுவனத்தை மூடி அவர்களுக்கு சிறை தண்டனையும் வழங்கப்படும்.