மாதவிடாய் காலத்தில் இதை செய்தால் ஒரு துளி கூட வலி இருக்காது!! 100% அனுபவ உண்மை!!

0
95
#image_title

மாதவிடாய் காலத்தில் இதை செய்தால் ஒரு துளி கூட வலி இருக்காது!! 100% அனுபவ உண்மை!!

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படக்கூடிய வலியை தடுக்கவும் அவ்வப்பொழுது எந்த உணவை உட்கொள்ளலாம் என்பது பற்றியும் இங்கு

காண்போம்.

மாதவிடாயில் ரத்தம் வெளியாகும் போது நம் கருப்பையில் நடக்கின்ற சுருக்கம் தான் வலியாக நமக்கு தென்படும்.

சாதாரணமாக வரக்கூடிய மாதவிடாய் வலியை சுலபமாக சரி செய்வது எப்படி என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.

ஈரம் செய்யப்பட்ட துணியை தினமும் 20 நிமிடங்கள் வயிற்றில் வைத்து படுத்தால் மாதவிடாய் வலியை குறைக்க முடியும்.

மேலும் இடுப்பு குளியல் அதாவது ஒரு டப்பில் குளிர்ந்த நீரை ஊற்றி குளிப்பதற்கு முன் அதில் இடுப்பு பகுதியில் இருந்து தொடை பகுதி மட்டும் நனையுமாறு 20 நிமிடங்கள் உட்கார்ந்து தினமும் இதை செய்தால் மாதவிடாய் வலியை கண்டிப்பாக குறைக்க முடியும்.

இதை பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் செய்யலாம்.

மாதவிடாய் காலத்தில் பெண்களின் மனநிலை சரியாக இருக்காது.

அதாவது பசிக்காமல் இருப்பது. உப்புசமாக இருப்பது. மற்றவர்களிடம் வெறுப்பை காட்டுவது மற்றும் உணவு பசி ஆகியவை ஏற்படும்.

இந்த உணவு பசியானது பெண்களின் உடம்பில் உள்ள ப்ரோஜஸ்டிரான் என்ற ஹார்மோனின் மூலமாக ஏற்படுகிறது.

தினமும் பழங்கள் மற்றும் ஜூஸ்களை சேர்த்துக் கொள்ளலாம்.

இவ்வாறு செய்வதால் பெண்களின் மாதவிடாய் வலியையும் மனநிலை மாற்றத்தையும் சரி செய்ய முடியும்.

மாதவிடாய் காலத்தில் சாப்பிட கூடியவை:

ஒரு நாளைக்கு நிறைய தண்ணீரை பருக வேண்டும்.

பழங்களில் ஆப்பிள், வாழைப்பழம், மாதுளம் பழம், கொய்யாப்பழம் ஆகியவற்றை எடுத்துக் கொள்வதால் வலியை நன்றாகவே குறைக்க முடியும்.

மேலும் உடம்பிற்கு குளிர்ச்சி அளிக்கும் விதமாக கிர்ணி பழம். தர்பூசணி பழத்தையும் நாம் எடுத்துக் கொள்ளலாம்.

இவ்வாறு மாதவிடாய் நாட்களில் மட்டும் எடுத்துக் கொள்ளாமல் தினமும் இதை நாம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஒவ்வொரு மாதமும் வரும் மாதவிடாய் வலியை தடுக்க முடியும்.

மாதவிடாய் காலத்தில் சாப்பிட கூடாதவை:

ஃபாஸ்ட் ஃபுட் உணவு வகைகள் ஆன பர்கர், பீட்சா, நூடுல்ஸ், ஃப்ரைட் ரைஸ் ஆகியவற்றை உண்ணக்கூடாது.

இதைத் தவிர்த்து தினமும் யோகா செய்து வந்தாலும் வலியை தடுக்க முடியும்.