4 ஆண்டுகளில் 8 ஆண்களை மணந்த பெண்! பரிசோதனையில் HIV!

0
177

பஞ்சாப் மாநிலத்தில் பாட்டியாலா மாவட்டத்தைச் சேர்ந்த குறைந்தது 8 ஆண்களை 30 வயது பெண் ஒருவர் திருமணம் செய்து ஏமாற்றிய சம்பவம் தான் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

திருமணத்தை காரணம் காட்டி மக்களிடம் கொள்ளையடிக்கும் பெண் மற்றும் அவரது மூன்று கூட்டாளிகளையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

 

அந்த பெண் கடந்த நான்கு ஆண்டுகளில் எட்டு பேரை திருமணம் செய்ததாகவும், திருமணமான ஒரு வாரத்திற்குள் அவர்களின் வீட்டில் இருந்து நகை மற்றும் பணத்துடன் தப்பி விடுவதாக ஒப்புக்கொண்டதாக பாட்டியாலா காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்கு முன்பு அந்த பெண் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார், அங்கு அவருக்கு Hiv எய்ட்ஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதற்குப் பிறகு பாதிக்கப்பட்ட எட்டு பேரையும் தொடர்பு கொண்ட காவல்துறை அவர்களையும் எச்ஐவி எய்ட்ஸ் பரிசோதனை செய்யச் சொல்லியுள்ளது.

 

 

குற்றம் சாட்டப்பட்ட பெண் திருமணத்திற்குப் பிறகு 10-15 நாட்களுக்கு மேலும் வழக்கம் போல தன் பணியை செய்து கொண்டிருப்பாராம். பின்னர் அவர் தனது கணவர் மற்றும் மாமியார் மீது வரதட்சணை வழக்கு பதிவு செய்வேன் என அச்சுறுத்துவாராம். மாமியார் அவளுடைய எச்சரிக்கைகளுக்கு அடிபணியவில்லை எனில், அவள் அந்த குடும்பத்தை மயக்கி, தனது கும்பலுடன் அந்த வீட்டிலுள்ள நகை மற்றும் பொருட்களை கூட்டாளிகளுடன் திருடுவார்களாம்.

 

பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து அதிக அளவு பணம் பறித்த பிறகு, அவள் நகரத்திலிருந்து வேறு இடத்திற்கு சென்று சென்றுவிடுவார் என சொல்ல படுகிறது. 30 வயதில் ஒரு பெண் விவாகரத்து செய்யப்பட்ட அல்லது நடுத்தர வயது ஆண்களை மயக்கி அவர்களை திருமணம் செய்துகொண்டு ஏமாற்றியுள்ளார். ,

 

மேலும் விசாரணையில், 30 வயது அந்த பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன என்பதை போலீஸ் குழு கண்டறிந்தது. நான்கு வருடங்களுக்கு முன்பு தனது கணவர் தன்னை கைவிட்ட பிறகு திருமணத்தின் பேரில் மக்களை கொள்ளையடிக்கும் மோசடியை அவர் தொடங்கி உள்ளார்.

Previous articleபராமரிப்புக்காக நிறுத்தப்பட்ட கப்பலில் தீ விபத்து! துறைமுகத்தில் பரபரப்பு!
Next articleஇனி இரண்டு PF கணக்கு! புதிய அப்டேட்! தெரிஞ்சிகோங்க!