தமிழகத்தில் 3000 பிளாஸ்டிக் தொழிற்சாலைகளுக்கு அனுமதி ரத்து.!! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.!!

Photo of author

By Vijay

தமிழகத்தில் 3000 பிளாஸ்டிக் தொழிற்சாலைகளுக்கு அனுமதி ரத்து.!! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.!!

Vijay

நேற்று அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டார் அதில் பேசிய அவர் “ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி பின்னர் தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.

அதன் காரணமாக, தமிழகத்திலுள்ள 3,000 பிளாஸ்டிக் தொழிற்சாலைகளுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் அடுத்த 3 ஆண்டுகளில் பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக மாற்றப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், பிளாஸ்டிக் பயன்படுத்துவது, சுற்றுச்சூழல் மற்றும் உடல் நலத்திற்கும் தீங்கு விளைவிக்கும் எனவே மக்களிடையே பிளாஸ்டிக் பயன்படுத்துவது பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.