31 சவரன் நகைகளை பறிமுதல் செய்த வழிப்பறி இளைஞர் ஒருவர் கைது!
அரியாலூர் மாவட்டத்தில் தொடர்ந்து வழிப்பறி கொள்ளையர்கள் அதிகரித்துக்கொண்டே வருகிறார்கள். இதையடுத்து அம்மாவட்டத்தில் பல வழிப்பறி கொள்ளைகள் நடந்திருக்கிறது. அப்பகுதில் பெண்கள் வழியில் செல்லும் போது வழிப்பறி கொள்ளையர்கள் நகைகளை பறித்து செல்வார்கள்.இது குறித்து காவல்நிலையத்தில் ரகசிய தகவல் ஒன்று வந்தது.
ஜெயம் கொண்டம் ,ஆண்டிமடம் மற்றும் அரியாலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர் வழிப்பறி கொள்ளை நடந்ததையொட்டி மாவட்ட எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படை ஒன்றை அமைத்திருந்தார்.இந்த நிலையில் ரகசிய தனிப்படை போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டு தொடர் வழிப்பறியில் ஈடுபட்டுள்ள அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள இடையக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த புரட்சித் தமிழனை சந்தேகத்தின் பெயரில் கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்து 31 சவரன் தங்க நகைகளை மீட்டு உள்ளனர்.இந்த நிலையில் மாவட்ட எஸ்பி பெரோஸ்கான் சிறப்பு தனிப்படை போலீசார்களுக்கு பாராட்டுகள் தெரிவித்து சான்றிதழும் மற்றும் சன்மானமும் அளித்து பெருமைபடுத்தினார்.