அனைத்து அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி 31%முதல் 34%ஆக உயர்வு!. மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு..
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 34 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று சுதந்திர தின உரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.அதில் தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 31% லிருந்து 34% ஆக உயர்த்தி வழங்கப்படும்.
மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.அரசு அலுவலர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு இன்று முதல் அகவிலைப்படி வழங்கப்படும்.
இதன் மூலம் 16 லட்சம் பேர் பயன் அடைவார்கள் என தெரிவித்தார்கள். இதனால் ஆண்டுக்கு அரசு ரூ ,947 கோடியே 60 லட்சம் கூடுதலாகச் செலவாகும் என்று முதல்வர் தெரிவித்தார்.அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
தமிழக முதல் அமைச்சர் 75ஆவது சுதந்திர தின உரையில் மத்திய அரசுப் பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிடும்.இந்த கோரிக்கையை ஏற்று கடுமையான நிதிச்சுமைக்கு இடையிலும் மாநில அரசு ஊழியர்கள் அல்லது ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 01.07.2022 முதல் அகவிலைப்படியை 31 விழுக்காட்டிலிருந்து 34 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார்.
இந்த அறிவிப்பின்படி தலைமைச் செயலளாளர் முதல் கடைநிலை ஊழியர் வரை அனைத்து தமிழ்நாடு அரசின் ஊழியர்களுக்கும் இந்த அகவிலைப்படி 01.07.2022 முதலே உயர்த்தி வழங்கப்படும். இதற்கான அரசாணைகள் விரைவில் தனித்தனியே வெளியிடப்படும். என அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.