லடாக் எல்லையில் சீனாவுக்கு பதிலடி கொடுக்க தயாராகும் இந்திய ராணுவம்!

0
77

கிழக்கு லடாக் எல்லையில் சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, உள்நாட்டில் தயார் செய்யப்பட்ட ட்ரோன், தாக்குதல் படகு போர் வாகனம், தானியங்கி தகவல் தொடர்பு சாதனம் போன்ற பல்வேறு நவீன தளவாடங்களை ராணுவத்திடம் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங் ஒப்படைத்தார்.

இந்தியா மற்றும் சீனா எல்லையில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில், அந்தப் பகுதியில் இந்திய ராணுவம் நேற்று தாக்குதல் ஒத்திகை நடத்தியது. லடாக்கில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே அமைந்த பாங்காங் ஏரியில் பாதி இந்தியா வசமும், மீதம் சீனா கட்டுப்பாட்டிலும், இருக்கின்றன. ராணுவத்துக்கு புதிதாக வழங்கப்பட்ட இந்த நவீன தாக்குதல் படகில் ஒரே சமயத்தில் 35 வீரர்கள் பயணம் செய்யலாம். ஏரியின் எந்த பகுதியையும், துரிதமாக சென்றடையலாம். இதற்கான ஒத்திகையில் நேற்று வீரர்கள் ஈடுபட்டதாக தெரிகிறது.

ஆனாலும் இதனைத் தவிர்த்து உள்நாட்டில் தயார் செய்யப்பட்ட ஆளில்லா ட்ரோன் விமானம் போர் வாகனங்களும், ராணுவத்திடம் வழங்கப்பட்டனர். எஃப் இன்சாஸ் என்ற எதிர்கால தரைப்படை வீரர்களுக்கான அமைப்பை இராணுவத்திடம் வழங்கும் நிகழ்ச்சியும், டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதன் அடிப்படையில் ரஷ்யாவுடன் ஒன்றிணைந்து தயாரிக்கப்பட்ட ஏகே 203 ரக துப்பாக்கி பாலிஸ்டிக ரக தலைக்கவசம், அதிநவீன கண்ணாடி, துப்பாக்கி குண்டு தொலைக்காத ஆடை, உள்ளிட்டவை வீரர்களுக்கு வழங்கப்படும்.

தலைக்கவசத்தில் 360 டிகிரி கோணத்தில் பார்க்கும் வசதி இரவு நேரத்திலும், துல்லியமாக பார்க்க உதவும் கருவிகள், உள்ளிட்டவை பொருத்தப்பட்டிருக்கும் என்று பாதுகாப்புத்துறை குறிப்பிட்டிருக்கிறது.

லடாக்கிலிருக்கின்ற உலகின் மிகப்பெரிய போர்முனையான சியாச்சின் பணிப்பாறையருகே பார்தாபூர் ராணுவ தளத்தில் ஒரு மெகாவாட் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையமும், ராணுவ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.