10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதிய 32 மாணவர்களுக்கு கொரோனா உறுதி! அதிர்ச்சியில் பெற்றோர்கள்

0
125

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு போடப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றனர்.ஊரடங்கு காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் பல மாநிலங்களில் இறுதி ஆண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் வந்தன.ஆனால் எதிர்ப்புகளை மீறி ஜூன் 25 முதல் ஜூலை 3 ஆம் தேதி வரை பொதுத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன.இந்த பொதுத் தேர்வில் கலந்துகொண்ட மாணவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதில் தேர்வு எழுதியுள்ள மாணவர்கள் 7.60 லட்சம் பேர்,தேர்வில் கலந்து கொள்ளாத மாணவர்களின் எண்ணிக்கை 14,745 பேர், 3,911 பேர் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்ததால் தேர்வை எழுத முடியவில்லை,மேலும் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தேர்வில் கலந்து கொள்ளாத மாணவர்களின் எண்ணிக்கை 863 பேர்.

இந்நிலையில் நேற்று 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 14 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது இதனால் கொரோனா பாதித்த மாணவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.

Previous articleகை வைத்தியத்தில் சிறந்த பலன் தரும் மிளகு வைத்தியம்
Next articleபண்டைய தமிழர்களின் வாழ்வியல் முறையை எடுத்துரைக்கும் விதமாக கீழடியில் எடைக்கற்கள் கண்டுபிடிப்பு!!