24 மணிநேரத்தில் 32,937- புதிய கொரோனா பாதிப்பு! 417 பேர் இறப்பு!

Photo of author

By Kowsalya

24 மணிநேரத்தில் 32,937- புதிய கொரோனா பாதிப்பு! 417 பேர் இறப்பு!

Kowsalya

சுகாதாரத்துறை சொன்ன அறிவிப்பின்படி நேற்று ஆகஸ்ட் 16 ஆம் தேதி புதிய 32,937 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதே போல் 24 மணி நேரத்தில் 417 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 417 பேர் குழந்தைகள் இறந்துள்ளனர் 35909 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளனர் என அறிக்கை சொல்கின்றது.

 

தடுப்பூசியை பொருத்தவரை, மாநிலங்களில், உத்தரபிரதேசம் அதிக (ஒட்டுமொத்த) தடுப்பூசி அளவுகளை 5.74 கோடியிலும், மகாராஷ்டிரா 4.94 கோடியையும், குஜராத் 4.02 கோடியையும் நெருங்கியுள்ளது.

 

ஆகஸ்ட் 16 தேதியின் படி இந்தியாவில் இப்போது 3,81,947 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்த வழக்குகளில் 1.19 சதவிகிதம் ஆகும்.

 

நாட்டில் அதிகபட்சமாக கொரோனா பாதிக்கப்பட்ட மாநிலத்தில் 1,79,155 ஆக கேரளா உள்ளது, மகாராஷ்டிரா 67,688 சிகிச்சை பெற்று வருகின்றனர், கர்நாடகா 22,523 சிகிச்சை பெற்று வருகின்றனர், தமிழ்நாடு 20,458 சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றும் ஆந்திரா 17,865 சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

ஆகஸ்ட் 16 தேதியின் படி மகாராஷ்டிராவில் 130 புதிய இறப்புகள் பதிவாகியுள்ளன, அதைத் தொடர்ந்து கேரளா (102) இறப்பு பதிவாகி உள்ளது, ஒடிசா (64)இறப்பு பதிவாகி உள்ளது. தமிழ்நாடு (23) இறப்பு பதிவாகி உள்ளது கர்நாடகா (21) இறப்பு பதிவாகி உள்ளது.

 

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், அருணாச்சலப் பிரதேசம், பீகார், சண்டிகர், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி/டாமன் மற்றும் தியு, டெல்லி, குஜராத், ஜார்க்கண்ட், லடாக், லட்சத்வீப், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சிக்கிம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் இறப்பு எதுவும் பதிவாகவில்லை என்ற மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது.