தமிழகத்தில் அரசு வேலைக்காக போட்டி தேர்வுகளை எதிர்நோக்கி இருக்கக்கூடிய தேர்வர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அமைச்சர் பெரிய கருப்பன் அறிவித்திருக்கிறார். இவருடைய அறிவிப்பின்படி கூட்டுறவு துறையில் 3353 காலி பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கூட்டுறவு துறையில் வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் ஆக பார்க்கப்படுகிறது.
நேற்று நடைபெற்ற சட்டசபை விவாதத்தின் போது பேசிய அமைச்சர் பெரிய கருப்பன் கூட்டுறவுத் துறையில் காலியாக இருக்கக்கூடிய பணியிடங்கள் விரைவில் நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என்றும்மாநில கூட்டுறவு ஆள்சேர்ப்பு நிலையம் மற்றும் தமிழ்நாடு பணியாளர் தேர்வு வாரியம் இதற்கான வழிமுறைகள் பின்பற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் சட்டசபை விவாதத்தின் பொழுது அவர் பேசிய விவரங்கள் பின்வருமாறு :-
கூட்டுறவு சங்கங்களில் உதவியாளர் பணியிடங்களும், நியாய விலை கடைகளில் விற்பனையாளர், கட்டுநர் போன்ற பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாகவும் மொத்தமாக தமிழகத்தில் இது போன்ற காலி பணியிடங்கள் 3,353 இருப்பதாக கண்டறியப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். கூடிய விரைவில் இந்த காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் 13,266 காலி பணியிடங்கள் கடந்த ஆண்டு கணக்கிடப்பட்ட தேர்வுகளின் அடிப்படையில் 9,913 பணியிடங்கள் நிரப்பப்பட்டுவதாகவும் மீதமுள்ள காலி பணியிடங்கள் இந்த ஆண்டு நிறுவப்படுவதற்கான அறிவிப்புகள் கூடிய விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.