ஒரே நாளில் 350 பேர் பலி! ருத்ர தாண்டவத்தை தொடங்கிய கொரோனா!
கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது. மக்களைக் காப்பாற்ற அரசாங்கமும் பலவித நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. இவ்வாறு இருக்கையில் தொற்றானது இடைவிடாமல் மக்களை துரத்துகிறது. முதல் அலையின் போது தடுப்பூசி மற்றும் மருத்துவம் சார்ந்த எந்தவித முன்னேற்பாடுகளும் இன்றி இருந்தது. அதற்கு அடுத்த அலையில் முன்னேற்பாடுகள் செய்து கொண்டிருக்கும் நிலையிலேயே பலருக்கு தொற்று பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது.
அந்த சூழலில் பல உயிர்களை இழக்க நேரிட்டது. முதலில் தடுப்பூசியும் நடைமுறைக்கு வந்த பொழுது மக்கள் அதனை செலுத்தி கொள்ள சிறு தயக்கம் அடைந்தாலும் தற்போது விழிப்புணர்வுடன் மக்கள் தப்பித்துக் கொள்கின்றன. இந்தியா முழுவதும் 75 சதவீதத்திற்கும் மேல் மக்கள் தடுப்பபூசி செலுத்தியுள்ளனர். அதுமட்டுமின்றி பள்ளி மாணவர்களுக்கு தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த கொரோனா தொற்றானது பரிமாற்றம் வளர்ச்சி அடைந்து உருமாறி வருகிறது. சென்ற ஆண்டு டெல்டா, டெல்டா பிளஸ் ஆக இருந்த கொரோனா இந்த ஆண்டு ஒமைக்ரானாகா உரு மாற்றமடைந்துள்ளது.
இது டெல்டா பிளஸ் தொற்றை காட்டிலும் குறைந்த அளவு பாதிப்பையே அளிக்கும். ஆனால் டெல்டா பிளஸ் தொற்றை விட அதி வேகமாகப் பரவும் தன்மை கொண்டது. தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு தொற்று உறுதியாகும் நிலை வந்துவிட்டது. இந்த சூழலில் மாநில அரசுகள் அனைத்தும் தொற்று பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை அமல் படுத்தி உள்ளனர். நமது தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பு அளித்து உள்ளனர். 10 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் தற்போது நடைபெற்று வருகிறது. வார இறுதி நாளான ஞாயிற்றுக் கிழமையில் முழு ஊரடங்கும் மற்ற நாட்களில் இரவு ஊரடங்கு அமல் படுத்தி உள்ளனர்.
பொங்கல் பண்டிகை முடிந்து தமிழகத்தில் முழு ஊரடங்கு போடப்படும் என்று பேசப்பட்டு வருகிறது. இந்த சூழலில் இந்தியாவில் ஒரே நாளில் 350 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இவ்வாறு நாளுக்கு நாள் இழப்பு அதிகரித்துக்கொண்டே இருப்பதால் நாடு முழுவதும் முழு ஊரடங்கு போடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.