இடைக்கால ஜாமீனில் வெளியே வந்துள்ள முன்னாள் அமைச்சர்!

0
78

இடைக்கால ஜாமீனில் வெளியே வந்துள்ள முன்னாள் அமைச்சர்!

பண மோசடி வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

ஆவின் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பணத்தை பெற்று கொண்டு ரூபாய் மூன்று கோடி வரை பண மோசடி செய்து ஏமாற்றியதாக ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் குற்ற பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் ராஜேந்திர பாலாஜி மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இதையடுத்து இந்த வழக்கில் இருந்து தப்பிக்க ராஜேந்திர பாலாஜி சென்னை உயர்நீதி மன்றத்தில் முஜாமீன் கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதி மன்றம் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. அதை தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி தலைமறைவானார்.

இந்நிலையில் தலைமறைவான ராஜேந்திர பாலாஜியை பிடிக்க பல தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல நாட்களாக தேடி வந்த நிலையில் கடந்த வாரம் கர்நாடக மாநிலத்தில் காவல் துறையினர் அவரை செய்தனர். இதையடுத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி ராஜேந்திர பாலாஜி தரப்பில் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் மீதான விசாரணை கடந்த சில நாட்களுக்கு உச்சநீதி மன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் கூடுதல் ஆவணங்களை சமர்பிக்க கோரி விசாரணையை ஜனவரி 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

அதன்படி, இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்று உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையில் அனைத்து தரப்பு வாதங்களையும் விசாரித்த உச்சநீதி மன்றம் ராஜேந்திர பாலாஜிக்கு நான்கு வாரம் இடைக்கால ஜாமீன் அளித்து உத்தரவிட்டதை தொடர்ந்து அவர் சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார்.

author avatar
Parthipan K