கொரோனா சிகிச்சைக்காக 350 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனையை பார்வையிட்ட சுகாதாரத்துறை அமைச்சர் : தயார் நிலையில் இருப்பதாக வீடியோ வெளியிட்டார்!

உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தங்கள் நாட்டு மக்கள் காப்பாற்ற போராடி வருகிறது. இந்த நோய்த்தொற்று தமிழ் நாட்டிலும் பரவி வருகிறது, இதனை தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இதனையடுத்து பிரதமர் மோடி நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து பொதுமக்கள் அதற்கு ஒத்துழைப்பு வழங்கும் படி கேட்டுக்கொண்டார். இந்த நோய் தொற்று வேகமாக பரவி வருவதால் மக்கள் பொது இடங்களில் கூட அல்லது வெளியில் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

தமிழகத்தின் சுகாதாரத்துறை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை காக்க இரவு பகல் பாராமல் அயராது பாடுபட்டு வருகிறது. இதற்கென தனது முழு நேரத்தையும் செலவிட்டு வரும் அமைச்சர் விஜயபாஸ்கர் சுகாதார துறையினருக்கு பக்க பலமாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் ஓமந்தூரார் மருத்துவமனையில் தயார் நிலையில் உள்ள கொரோனா வார்டை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று பார்வையிட்டார். அதில் 350 படுக்கைகள் உட்பட தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் என அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அமைச்சரின் டுவிட்டர் பக்கத்தில் வெளியான இந்த வீடியோவை பார்த்து அவரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

https://twitter.com/Vijayabaskarofl/status/1243224672449126401?s=19

Leave a Comment