பள்ளி கல்லூரிகளுக்கு தொடர் 4 நாட்கள் விடுமுறை!! தமிழக அரசு மாஸ் அறிவிப்பு!!

Holiday: தமிழக அரசானது தீபாவளி பண்டிகையை அடுத்த நவம்பர் 1 ஆம் தேதியும் அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது.

இந்த வருடம் தீபாவளி பண்டிகையானது இம் மாதம் இறுதியில் 31 ஆம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. வெளியூரில் வேலை செய்பவர்கள் கல்லூரி மாணவர்கள் என அனைவரும் அன்றிரவே சொந்த ஊரிலிருந்து கிளம்ப வேண்டியிருக்கும்.

தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாள் நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி வெள்ளிக்கிழமை வர உள்ளதால் அன்றும் அரசு விடுமுறையாக அறிவித்தால் அடுத்தடுத்து சனி மற்றும் ஞாயிறு என தொடர்ந்து நான்கு நாட்கள் விடுப்பு வந்துவிடும் என பலரும் எதிர்பார்த்தனர்.

மேலும் இது குறித்து தமிழக அரசிடம் கோரிக்கையும் வைத்தனர். கோரிக்கை வைத்ததன் பெயரில் தீபாவளிக்கு அடுத்த நாள் நவம்பர் ஒன்றாம் தேதி அன்றும் தமிழகத்தில் செயல்படும் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அனைத்திற்கும் அரசு விடுமுறையாக அளித்துள்ளது.

இவையனைத்தும் ஊழியர் மற்றும் மாணவர்களின் நலன் கருதி அறிவித்ததாக தெரிவித்துள்ளனர். மேற்கொண்டு அந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நவம்பர் மாதம் ஒன்பதாம் தேதி பணி நாளாக அனைத்து அலுவலகங்களும் செயல்படும் என கூறியுள்ளனர். அரசின் இந்த அறிவிப்பால் அரசு ஊழியர்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் என பலரும் திக்கற்ற மகிழ்ச்சியில் உள்ளனர்.