கடலூர் ரசாயன ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் பலி! 20 நபர்களுக்கு பாதிப்பு

கடலூர் ரசாயன ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் பலி! 20 நபர்களுக்கு பாதிப்பு

கடலூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் சிப்காட்டில் இயங்கிவரும் ரசாயன ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.20 நபர்களுக்கு மூச்சு திணறல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கடலூர் சிப்காட்டில் கிரீம்சன் என்ற நிறுவனம் பூச்சிக்கொல்லி ரசாயனம் தயாரிக்கும் ஆலையை நடத்தி வருகிறது. இந்த ஆலைக்கு அருகிலுள்ள பொதுமக்கள் ஷிப்ட் அடிப்படையில் வேலைக்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் இன்று காலை 6 மணி சிப்டிற்கு வந்து வேலையை ஆரம்பித்த சிறிது நேரத்தில் அந்த ஆலையின் இரண்டாவது தளத்தில் இயங்கி வந்த பாய்லர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியுள்ளது.இந்த விபத்தில் சிக்கி தீக்காயங்களுடன் இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.மேலும் இருவர் அங்கு உருவான புகையில் மூச்சு திணறல் ஏற்பட்டதால் பலியாகியுள்ளனர்.

பாய்லர் வெடித்ததில் வெளியான புகையால் அப்பகுதியே புகை மண்டலமாக மாறியுள்ளது.இந்த நச்சு புகையுடன் கலந்த காற்றை சுவாசித்ததில் 20 நபர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்து மீட்பு பணியை மேற்கொண்டனர்.இதனால் அங்கு ஏற்படவிருந்த பெருமளவு சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.மேலும் இந்த விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்கில் செயல்படும் ஆலைகளில் இவ்வாறு அடிக்கடி விபத்து ஏற்படுவதால்ஆலைகளில் முறையான பாதுகாப்பு வழிமுறைகள் கடைபிடிக்கபடுகிறதா என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதிபடுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Comment