போலி ரெம்டிசிவர் மருந்து விற்பனை! வசமாக சிக்கிய பாஜக நிர்வாகி!

0
55

மெடிக்கல் ஏஜென்சி மேலாளரும் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகியுமான ராஜேஷ் மகேஸ்வரர் என்ற நபர் ஆக்ஸிஜன் மீட்டர்களை கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்திருக்கிறார். வெளிச்சந்தையில் 600 முதல் 700 ரூபாய் வரையிலான விலைக்கு விற்பனை செய்யப்படும் ஆக்ஸிஜன் மீட்டர்களை 4 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்து பல லட்சம் ரூபாய் சம்பாதித்து இருக்கிறார் இந்த நிர்வாகி என சொல்லப்படுகிறது.

இதுதொடர்பாக மத்திய பிரதேச மாநிலத்தில் ஆக்சிஜன் மீட்டர் மற்றும் போலீஸார் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்ததாக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. சம்பவம் நடைபெற்ற அன்றைய தினம் வாடிக்கையாளர் ஒருவருக்கு 4 ஆயிரம் ரூபாய்க்கு ஆக்சிஜன் மீட்டர்களை மகேஸ்வரர் விற்பனை செய்ய முயற்சி செய்த சமயத்தில் காவல்துறையினர் அவரை கையும் களவுமாக பிடித்து இருக்கிறார்கள். சுமார் 607 ஆக்ஸிஜன் மீட்டர்களையும் காவல்துறையினர் அவரிடம் இருந்து பறிமுதல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

அதேபோல மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூர் நகர மருத்துவமனையில் இயக்குனராக இருந்து வரும் சரப்ஜித் சிங் போலி ரெம்டிசிவர் மருந்துகளை ஒரு குப்பியை 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை விற்பனை செய்ததாக காவல்துறையினர் அவரை கைது செய்து இருக்கிறார்கள். நாடு முழுவதும் மருந்து கிடைக்காமல் மக்கள் திண்டாடி வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் பாஜகவின் நிர்வாகி போலி மருந்துகளை விற்று மோசடி செய்திருக்கும் சம்பவம் மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏற்கனவே ரெம்டிசிவர் மருந்து கிடைக்கவில்லை என்று மாநிலத்தில் மட்டுமல்லாமல் நாட்டிலும் கூட ஆங்காங்கே டோக்கன் மூலமாக வழங்கப்படும் என்று டோக்கன் பெற்றுக்கொண்டு நாட்கணக்கில் நோயாளிகளின் உறவினர்கள் காத்திருந்தும் கூட ரெம்டிசிவர் மருந்து கிடைக்காத ஒரு சூழ்நிலையில் இருந்து வருகிறது.இப்படியான சூழ்நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகி ஒருவர் இப்படி சில விரும்பத்தகாத செயலில் ஈடுபடுவது எல்லோராலும் வெறுக்கத்தக்க ஒரு செயலாக பார்க்கப்படுகிறது. இதற்கு பாரதிய ஜனதா கட்சியின் மேலிடம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்திருக்கிறது.