சாலையில் கேட்பாரற்று கிடந்த 4 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள்:! நேர்மைக்கு கிடைத்த வெகுமதி!

Photo of author

By Pavithra

சென்னை ஓட்டேரி நம்மாழ்வார் பேட்டையை சேர்ந்த பியூஸ் என்பவர் சவுகார்பேட்டையில் வெள்ளி நகை செய்யும் பட்டறை நடத்தி வருகின்றார்.இவர் அண்மையில் ஆர்டரின் பெயரில் வெள்ளி கொலுசு, செயின்,மற்றும் வெள்ளி மோதிரங்களை செய்தார்.இவற்றின் மதிப்பு தோராயமாக 4 இலட்சம் இருக்கும்.இதனை டெலிவரி செய்யும் விதமாக நேற்று முன்தினம் 4 லட்சம் மதிப்பிலான வெள்ளி பொருட்களை தனது வீட்டிற்கு பைக்கில் எடுத்துச் சென்றார் பியுஸ்.வீட்டிற்குச் சென்று தனது வண்டியில் வைத்திருந்த வெள்ளி நகையை எடுக்க சென்றபோது பைக்கில் வெள்ளி நகை இல்லாதது கண்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தார்.உடனே யானைக்கவுனி போலீசாரிடம் புகார் அளித்தார்.இவர் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை செய்து வந்தனர்.

இந்நிலையில் பியுஸ்-க்கு புதிய செல்போன் எண்ணிலிருந்து ஒரு அழைப்பு வந்தது.அதில் பேசிய நபர் தான் ராயப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் என்றும், என்னுடைய பெயர் பாஷா, என்றும் நான் எலக்ட்ரானிக் பொருட்கள் வியாபாரம் செய்கிறேன் என்றும், அவரை அறிமுகப் படுத்திக் கொண்டார்.மேலும் நீங்கள் ரோட்டில் தவறவிட்ட பையில் இருந்த செல்போன் எண் மூலம் உங்களை நான் தொடர்பு கொண்டேன் என்றும்,நகைகள் அனைத்தும் பத்திரமாக இருக்கிறது என்றும்,அதனை நான் யானைக்கவுனி காவல் நிலையம் சென்று ஒப்படைத்து விடுகிறேன் என்றும் கூறினார்.

மிகவும் நிம்மதி அடைந்த பியூஸ் போலீஸ் நிலையம் சென்று தனது நகைகளை அடையாளம் சொல்லி பெற்றுக்கொண்டார்.மேலும் தனக்கு 4 லட்சம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் கையில் கிடைத்தும் அதை நேர்மையாக போலீசாரிடம் ஒப்படைத்த பாஷாவை போலீசார் பாராட்டினர்.மேலும் பியூஸ் பாஷாவுக்கு மிகுந்த நன்றியினை தெரிவித்தார்.இந்தச் சம்பவத்தின் மூலம் மனித நேயம் சாகவில்லை என்று உறுதியாகின்றது.