ஆடு வளர்ப்புக்கு அரசு தரும் 4 லட்சம்! எவ்வாறு பெறுவது? இதோ அதற்கான முழு விவரம்!

Photo of author

By Rupa

ஆடு வளர்ப்புக்கு அரசு தரும் 4 லட்சம்! எவ்வாறு பெறுவது? இதோ அதற்கான முழு விவரம்!

தமிழக அரசாங்கம் பல நலத்திட்டங்களை மக்களுக்காக அமல்படுத்தியுள்ளது. பல படித்த இளைஞர்களே தற்பொழுது விவசாயம் செய்ய முன்வந்துள்ளனர். அவர்களெல்லாம் இத்திட்டத்தின் மூலம் பயனடையலாம். அதிக வருமானம் தரக்கூடிய தொழில்களில் இந்த ஆடு வளர்ப்பும் ஒன்று. அவ்வாறு ஆடு வளர்க்க அரசாங்கம் கடன் கொடுத்து வருகிறது. பத்து ஆடுகளுக்கு நான்கு லட்சம் வரை கடன் அளிக்கிறது. ஆடு வளர்ப்பிற்கு கடன் வாங்க நினைப்பவர்கள் அருகில் இருக்கும் தனியார் வங்கி அல்லது அரசு வங்கியை தொடர்பு கொள்ளலாம். ஆடு வளர்ப்பு கடன் தொகைக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பிக்கும் நபரின் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, நான்கு முதல் ஐந்து மாத வங்கி அறிக்கை, ஆடு வளர்ப்பு திட்ட அறிக்கை ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆவணங்களை எல்லாம் நீங்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள நிதி நிறுவனத்திடம் அளித்து கடன் தொகையை பெற்றுக் கொள்ளலாம்.