ஆசிய பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு ஒரு தங்கம் உள்பட 4 பதக்கங்கள்!!! தமிழக வீரர் மாரியப்பன் வெள்ளி வென்றார்!!!
தற்பொழுது நடைபெற்று வரும் ஆசிய பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணி ஒரு தங்கம் உள்பட 4 பதக்கங்களை வென்றுள்ளது. மேலும் தமிழக வீரர் மாரியப்பன் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
சீனா நாட்டில் நேற்று(அக்டோபர்22) ஆசிய பாரா ஒலிம்பிக் போட்டிகளில் தொடங்கியது. இந்த போட்டியில் இந்தியா சார்பாக 303 வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டார். நேற்று(அக்டோபர்22) தொடங்கிய ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள் வரும் அக்டோபர் 28ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் ஆசிய பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இன்று(அக்டோபர்23) நடைபெற்ற ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் இந்தியாவை சேர்ந்த சைலேஷ் குமார் தங்கப்பதக்கமும், மேலும் தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் வெள்ளிப் பதக்கமும் வென்றனர். அதே போல ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் ராம்சிங் வெண்கலம் வென்றார்.
மேலும் ஆசிய பாரா ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் இன்று(அக்டோபர்23) நடைபெற்ற பெண்களுக்கான படகுப் போட்டியில் இந்தியாவை சேர்ந்த வீராங்கனை பிரச்சி யாதவ் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
இதன் மூலமாக இந்திய அணி ஆசிய பாரா ஒலிம்பிக் போட்டியில் ஒரே நாளில் ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என்று நான்கு பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது. இதன் மூலமாக இந்தியா தற்பொழுது வரை இரண்டு தங்கம், மூன்று வெள்ளி, இரண்டு வெண்கலம் என்று மொத்தமாக 7 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் முன்றாவது இடத்தில் உள்ளது.