இரண்டு வருடங்களுக்கு நான் பிசிதான்!!! இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் பேட்டி!!!

0
149
#image_title

இரண்டு வருடங்களுக்கு நான் பிசிதான்!!! இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் பேட்டி!!!

அடுத்த இரண்டு வருடங்களுக்கு நான் பிசியாக இருப்பேன் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

மாநகரம் திரைப்படம் மூலமாக இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் அவர்கள் தன்னுடைய முதல் படத்திலேயே தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கினார். காப்பு அணிந்த கதாநாயகன், இரவு நேர காட்சிகள், பிரியாணி காட்சி என்று தனக்கே உரித்தான பாணியில் முதல் திரைப்படத்தில் இருந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் காட்சிகளை வைத்து ரசிகர்களின் மத்தியில் கவனம் ஈர்த்தார்.

அடுத்த திரைப்படத்தில் நடிகர் கார்த்தியை வைத்து கைதி திரைப்படத்தை ஒரு இரவில் நடப்பது போல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கினார். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற அடுத்த திரைப்படத்தில் நடிகர் விஜய் அவர்களை கல்லூரி முதல்வர் வாத்தியாராக வைத்து மாஸ்டர் என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த இரண்டு திரைப்படங்களிலும் பிரியாணி காட்சியையும் இரவு நேர சண்டை காட்சியையும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வைத்திருந்தார்.

அதன் பின்னர் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் நடித்த விக்ரம் திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்பொழுது நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள லியோ திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கியுள்ளார். இதையடுத்து இயக்குநர் லேகோஷ் கனகராஜ் அவர்கள் அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நடிக்கும் 171வது திரைப்படத்தை இயக்கவுள்ளார். இந்நிலையில் அடுத்து இரண்டு வருடங்கள் மாழுவதும் நான் பிசியாகத்தான் இருப்பேன் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் பேட்டி அளித்துள்ளார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் “நான் அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நடிக்கும் தலைவர் 171 திரைப்படத்தை இயக்கவுள்ளேன். இதற்கு எப்படியும் ஒரு வருடம் ஆகும். அடுத்து நடிகர் கார்த்தி நடிக்கும் கைதி 2 திரைப்படத்தை இயக்கவுள்ளேன். இதற்கும் ஒரு வருடம் ஆகும்.

இந்த இரண்டு திரைப்படங்களை இயக்கி முடிப்பதற்கே இரண்டு வருடங்கள் ஆகும் என்பதால் அடுத்த இரண்டு வருடங்களில் நான் பிசியாக இருப்பேன். மேலும் அடுத்த இரண்டு வருடங்களில் புதிய திரைப்படங்களை இயக்குவதற்கு நான் கமிட் ஆக மாட்டேன்” என்று கூறியுள்ளார்.

Previous articleஆசிய பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு ஒரு தங்கம் உள்பட 4 பதக்கங்கள்!!! தமிழக வீரர் மாரியப்பன் வெள்ளி வென்றார்!!!
Next articleஇவரை ஏன் லியோவில் நடிக்க வைத்தார்கள் என்று ரசிகர்கள் விமர்சனம்!!! பதிலடி கொடுத்த பிரபல நடிகை!!!