தபால் நிலையத்தில் உள்ள 4 சூப்பரான சேமிப்பு திட்டங்கள்!! 5 வருடத்தில் அதற்கான பலன்!!

0
2
4 Super Saving Schemes at Post Office!! The result in 5 years!!
4 Super Saving Schemes at Post Office!! The result in 5 years!!

வங்கிகளை விட தபால் நிலையங்களில் பணத்தை சேமிப்பது மிகவும் பாதுகாப்பானதாக மற்றும் அதிக வட்டி தருவதாக இருப்பதால் பலரும் தபால் நிலையங்களில் தங்களுடைய பணத்தை சேமிப்பது அதிகரித்து வருகிறது. இன்று தபால் நிலையத்தில் இருக்கக்கூடிய 5 ஆண்டுகால குறுகிய திட்டம் குறித்து பார்ப்போம்.

தேசிய சேமிப்பு கால வைப்பு :-

வங்கிகளில் Fixed Deposit என அழைக்கப்படும் இந்த முறை அஞ்சல் அலுவலகங்களில் Time Deposit என அழைக்கப்படும்.தேசிய சேமிப்பு கால வைப்பில் 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் வருமான வரிச்சட்ட பிரிவு 80சி-ன் கீழ் ரூ.1.5 லட்சம்வரை வரி விலக்கு பெறலாம். இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் ருபாய் முதலீடு செய்தால் 5 ஆண்டுகள் கழித்து உங்கள் கையில் 1,37,500 ரூபாய் இருக்கும்.

தேசிய சேமிப்பு மாதாந்திர வருமான திட்டம் :-

7.4% வட்டி தரப்படும் இந்தத் திட்டத்தில் ஒருவர் அதிகபட்சமாக 9 லட்சம் வரை முதலீடு செய்யலாம். அதுவே கூட்டுக்கணக்காக இருந்தால் 15 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தின் கால அளவு 5 ஆண்டுகள்.

இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் 5 ஆண்டுகளில் மொத்தம் 37,000 ரூபாய் வட்டியாக உங்களுக்கு கிடைக்கும். அதுவே இந்தத் திட்டத்தின் உச்சபட்ச முதலீடான 15 லட்ச ரூபாய் முதலீடு செய்தால் 5,55,000 ரூபாய் வட்டியாக கிடைக்கும்.

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் :-

இது 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத்திட்டம். ஒருவேளை ஓய்வு பெற்ற அரசு ஊழியராக இருந்தால் 55 வயதுக்குப் பிறகும், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியாக இருந்தால் 50 வயதுக்குப் பிறகும் இந்தத் திட்டத்தில் இணையலாம்.

இந்தத் திட்டத்தில் ஒரு லட்சம் முதலீடு செய்தால் 5 ஆண்டுகளில் உங்கள் கையில் 1,41,000 ரூபாய் இருக்கும். அதுவே உச்சபட்ச முதலீடான 30 லட்சம் முதலீடு செய்தால் 5 ஆண்டுகளில் உங்கள் கையில் 42,30,000 ரூபாய் இருக்கும்.

தேசிய சேமிப்பு பத்திரம் :-

குறைந்தபட்சமாக ஆயிரம் ரூபாய் முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தில் அதிகபட்ச வரம்பு கிடையாது.உதாரணமாக, இந்தத் திட்டத்தில் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் ஐந்தாண்டுகள் முடிவில் உங்கள் கையில் 1,44,903 ரூபாய் இருக்கும். அதாவது, உங்கள் முதலீட்டு தொகை 40%க்கும் மேலாக அதிகரித்திருக்கும்.

Previous articleதலித் முதல்வர் கோரிக்கை திட்டமிட்ட நாடகம் – திருமாவளவன் பதிலடி
Next articleகுழந்தைகள் கற்பூரம் சாப்பிட்டால் முதலில் என்ன நடக்கும் தெரியுமா??