4 விரைவு ரயிலில் அதிகரிக்கப்பட்ட முன்பதிவில்லா பெட்டிகள்!! மகிழ்ச்சியில் பயணிகள்!!

Photo of author

By Gayathri

4 விரைவு ரயிலில் அதிகரிக்கப்பட்ட முன்பதிவில்லா பெட்டிகள்!! மகிழ்ச்சியில் பயணிகள்!!

Gayathri

ரயில்களில் பயணிகளின் போக்குவரத்து அதிக அளவில் இருப்பதால் தெற்கு ரயில்வே அதிகரித்து வரக்கூடிய பயணிகளுக்காக 4 முக்கிய விரைவு ரயில் முன்பதிவு இல்லா பெட்டிகளை எண்ணிக்கையை அதிகரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

முன்பதிவில்லா பெட்டிகள் அதிகரிக்கப்பட உள்ள 4 விரைவு ரயில்கள் :-

 

✓ எழும்பூர் – தஞ்சாவூர் உழவன் விரைவு ரயில். இந்த ரயிலானது இரு மார்க்கத்திலும் கூடுதலாக ஒரு முன்பதிவு இல்லாவிட்டால் இணைக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

 

 

✓ சென்னை எழும்பூர் – கொல்லம் விரைவு ரயிலிலும் இரண்டு மார்க்கத்திலும் கூடுதலாக ஒரு முன்பதிவில்லா பெட்டி வருகிற ஜூலை 1 ஆம் தேதி முதல் இணைக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

 

✓ நாகர்கோவில் – தெலுங்கானா மாநிலம் காட்சிகுடா விரைவு ரயில். இதனுடைய இரு மார்க்கத்திலும் கூடுதலாக ஒரு முன்பதிவு இல்லா பெட்டி ஜூலை 5 ஆம் தேதி முதல் இணைக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

✓ சென்னை எழும்பூர் – கொல்லம் அனந்தபுரி விரைவு ரயில் இரு மார்க்கத்திலும் கூடுதலாக ஒரு முன்பதிவில்லா பெட்டி வருகிற ஜூலை 2 ஆம் தேதி முதல் இணைக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 

தெற்கு ரயில்வே எடுத்திருக்கக்கூடிய இந்த முக்கிய முடிவானது ரயிலில் பயணிக்க கூடிய பயனர்களுக்கு அதிக அளவில் பயனளிக்கும் என தெரிவிக்கப்பட்டிருப்பதோடு இந்த நான்கு வழித்தடங்களிலும் இயக்கப்படக்கூடிய விரைவு ரயில்களில் கூடுதல் முன்பதிவில்லா பெட்டியின் மூலம் அதிக அளவில் பயணிகள் பயணிப்பதற்கான வசதி கூட்டப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.