தண்ணீர் லாரி மோதியதில் 4 வயது சிறுவன் பலி !! சென்னையில் நடந்த சோகம்

Photo of author

By Parthipan K

தண்ணீர் லாரி மோதியதில் 4 வயது சிறுவன் பலி !! சென்னையில் நடந்த சோகம்

சென்னையில் பட்டினப்பாக்கம் அருகே தண்ணீர் லாரி மோதியதில் 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பட்டினப்பாக்கத்தில் இன்று காலை சிக்னலில் நின்று கொண்டிருந்த வாகனங்கள் மீது கட்டுப்பாடின்றி வந்த தண்ணீர் லாரி எதிர்பாராதவிதமாக மோதியது .இதில் தாத்தாவுடன் சென்றுகொண்டிருந்த நான்கு வயது சிறுவன் பிரனேஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் . மேலும் மோதியதில் 3 பேர் காயமடைந்தனர். இந்த விபத்தில் சிக்னல் கம்பங்கள், அருகில் இருந்த வாகனங்கள் சேதம் அடைந்துள்ளன.

சம்பவ இடத்திலேயே சிறுவன் உயிர் இறந்ததை அறிந்த லாரி ஓட்டுனர் அங்கிருந்து தப்பி ஓடிச் சென்று விட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. விபத்து ஏற்படுத்திய லாரியை, போக்குவரத்து காவலர்களால் கைப்பற்றப்பட்டு தப்பி ஓடிய ஓட்டுநரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சம்பவமானது பட்டினப்பாக்கம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.