1 கோடி மதிப்பிலான எம்டிஎம்ஏ போதைப்பொருளுடன் 4 இளைஞர்கள் கைது

Photo of author

By Anand

1 கோடி மதிப்பிலான எம்டிஎம்ஏ போதைப்பொருளுடன் 4 இளைஞர்கள் கைது

கொச்சி ஹோட்டலில் 1 கோடி மதிப்பிலான எம்டிஎம்ஏ போதைப்பொருளுடன் 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். கண்ணூரில் காரில் கடத்திய 1 கிலோ ஹாசிஸ் ஆயில் (கஞ்சா ஆயில்)5 கிலோ கஞ்சா ,5 கிராம் எம்டிஎம்ஏ போதைப்பொருள் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

கேரளா மாநிலம் கொச்சி வடக்கு ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டல் ஒன்றில் போதை பொருள் கடத்தி விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் சோதனை நடத்திய போது ஒரு அறையில் தங்கியிருந்த பினீஷ் நாயர், நவீன், ஆதித்யன், விஷ்ணு ஆகிய நான்கு பேரும் ஹோட்டல் அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 300 கிராம் எம்.டி.எம்.ஏ. போதை பொருளை கண்டுபிடித்தனர்.

அதன் சந்தை மதிப்பு சுமார் ரூ.1 கோடி ஆகும். இவர்கள் இந்த போதை பொருளை பெங்களூருவில் இருந்து கேரளாவுக்கு விற்பனை செய்ய கொண்டு வந்துள்ளனர். இது சம்பந்தமாக நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.பெங்களூரில் இருந்து இரண்டு குழுக்களாக போதைப்பொருள் கொண்டு வந்தனர். அதன் அடிப்படையில் மற்றொரு குழுவை போலீசார் தேடி வருகின்றனர்.

கண்ணூர் டவுன் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகப்படும் வகையில் வந்த காரை நிறுத்த சொல்லியுள்ளனர்.கார் நிற்காமல் சென்றதால காரை போலீசார் தூரத்தி சென்ற போது காரை சாலையில் விட்டுவிட்டு தப்பியோடினர்.

இதனையடுத்து போலீசார் அந்த காரை சோதனை செய்த போது காரில் 1 கிலோ ஹாசிஸ் ஆயில் (கஞ்சா ஆயில்)5 கிலோ கஞ்சா ,5 கிராம் எம்டிஎம்ஏ போதைப்பொருள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். காரின் நம்பர் பிளேட் போலி என்பதால் போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.