Breaking News, National, Politics

9 ஆண்டு கால ஆட்சியில் 40 சதவீதம் வேலையின்மை அதிகரிப்பு! ராஜீவ் கவுடா குற்றச்சாட்டு!!

Photo of author

By Sakthi

9 ஆண்டு கால ஆட்சியில் 40 சதவீதம் வேலையின்மை அதிகரிப்பு! ராஜீவ் கவுடா குற்றச்சாட்டு!
9 ஆண்டு கால ஆட்சியில் நாட்டில் 40 சதவீதம் வேலயின்மை அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் ஆராய்ச்சித்துறை தலைவர் ராஜீவ் கவுடா அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.
மத்தியில் பாஜக கட்சி ஆட்சி அமைத்து கடந்த மே 26ம் தேதியுடன் 9 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதை கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் உள்ள பாஜக கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். பாஜக கட்சி கடந்த 9 ஆண்டுகளில் செய்த சாதனைகளை மககளிடையே கொண்டு சேர்க்கும் விதமாக சாதனை புத்தகததையும் வெளியிட்டது.
இதையடுத்து காங்கிரஸ் ஆராய்ச்சி துறைத் தலைவர் ராஜீவ் கவுடா அவரகள் பாஜக கட்சி ஆட்சியில் இருந்த 9 ஆண்டுகளில் வேலையின்மை 40 சதவீதம் அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்ற நடவடிக்கைகளால் இந்தியாவில் கடந்த 9 ஆண்டுகளில் வேலையின்மை அதிகரித்துள்ளது. மேலும் நாட்டின் பொருளாதாரம்  படுகுழியில் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து காங்கிரஸ் ஆராய்ச்சித் துறை தலைவர் ராஜீவ் கவுடா அவர்கள் சத்திய மூர்த்தி பவனில் “ஏழைகளின் கூலி குறைந்துள்ள நிலையில் வேலையின்மையும் 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 9 ஆண்டு கால ஆட்சியில் பல்வேறு துறைகளில் ஒன்றிய அரசு தோல்வியை சந்தித்துள்ளது” என்று அவர் பேசினார்.

உலகக் கோப்பை தொடர் 2023! போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் இத்தனையா!!

2023ம் ஆண்டுக்கான IIFA விருதுகள்! சிறந்த இயக்குநராக நடிகர் மாதவன் தேர்வு!