கருணை கொலை அடிப்படையில் 4000 உயிரிழப்பு!! புதைக்கும் நேரத்தில் ஏற்பட்ட பரபரப்பு!
திண்டுக்கல் மாவட்டம் மேல்கரைப்பட்டி பகுதியில் எவிஏஜென் என்ற தனியார் இறைச்சி நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் வளர்க்கப்பட்டு வந்த 4000 கோடிகள் கருணை கொலை செய்யப்பட்டுள்ளது. இந்த கோழிகளை அந்நிறுவனத்தில் பணிபுரியும் நந்தகுமார் என்பவருடைய நிலத்தில் புதைக்க முற்பட்ட பொழுது பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இந்த 4000 கோழிகளையும் புதைப்பதற்காக வாகனத்தில் எடுத்துச் சென்ற பொழுது இது குறித்து தகவல் அறிந்த வயலூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி கணவர் மகுடீஸ்வரன் மற்றும் மக்கள் இதனை தடுத்து நிறுத்தினர்.
இது வைரஸ் தாக்கிய கோழியாக கூட இருக்கலாம் இங்கு புதைத்து, மக்களுக்கு ஏதேனும் நோய்கள் வரக்கூடும் என்று கூறினர். இவர்களுக்கு பதிலளிக்கும் விதத்தில் நிறுவனத்தினர், இது வைரஸ் தாக்கிய கோழிகள் கிடையாது. கோழிகள் விற்பனையாகாததால் கருணை கொலை செய்து புதைக்க வந்துள்ளோம் என தெரிவித்தனர். நந்தகுமார் பன்னிருவனத்தில் பணிபுரிவதால் அவருடைய விருப்பத்தோடு தான் அவர் நிலத்தில் புதைக்க வந்துள்ளோம் எனக் கூறினார். ஆனால் நிறுவனம் கூறிய பதிலை பொதுமக்கள் ஏற்கவில்லை.
மேலும் அந்தக் கோழி நிறுவனத்திற்கு திமுக செயலாளர் அபுதாஹீர் என்பவர் ஆதரவு தெரிவித்தார். அது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருப்பதை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி கோழியை இங்கு புதைக்க கூடாது என கூறி அனுப்பி வைத்தனர். மேலும், இதுபோல கருணை கொலை செய்து புதைக்க மாட்டோம் என்றும் நிறுவனம் சார்பாக தெரிவித்தனர். நான்காயிரம் கோழிகள் விற்பனையாகாததால் தான் கருணை கொலை செய்தார்களா என்று மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.