இந்திய பங்கு சந்தையில் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 4000 புள்ளிகள் சரிவு
கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பின் காரணமாக இந்திய பங்கு சந்தை தொடர் சரிவை சந்தித்து வந்தது. இந்நிலையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே தொடர் சரிவை சந்தித்து வந்தது.
இன்றைய வர்த்தகம் தொடங்கிய சுமார் ஒரு மணி நேரத்திற்குள்ளேயே, இந்திய பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் ஏறக்குறைய 10 சதவிகிதமான 2,990 புள்ளிகள் சரிந்து லோயர் சர்க்யூட் பிரேக்கரைத் தொட்டது. இதனையடுத்து வர்த்தகம் 45 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதனையடுத்து வர்த்தகம் ஆரம்பித்ததும் மீண்டும் சரிவை நோக்கி இந்திய பங்கு சந்தை சென்றது. இதனையடுத்து இந்தியப் பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் ஏறக்குறைய 4000 இறங்கி 26000 க்குக் கீழ் வர்தகமாகி வந்தது.
இதே போல மும்பை பங்கு சந்தை குறியீடான நிஃப்டி 1150 புள்ளிகள் குறைந்து 7500 என்ற அளவில் வர்த்தகமாகி வந்தது. பங்கு சந்தையில் இன்று ஏற்பட்ட இந்த வீழ்ச்சிக்கு கொரோனா பதிப்பு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இது மட்டுமில்லாமல் குறிப்பாக இந்திய ரூபாயின் வீழ்ச்சி, வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறியது மற்றும் இந்திய ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் தங்களுடைய உற்பத்தியை நிறுத்தியது போன்றவைகளும் காரணமாக பார்க்கப்படுகிறது.