4307 செவிலியர் காலி பணியிடங்கள்! மா.சுப்பிரமணியன் வெளியிட்ட முக்கிய தகவல்!
இன்று திருச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் பருவ கால பேரிடர் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், காய்ச்சல் மற்றும் பொது சுகாதார பணிகள் குறித்தும் தமிழ்நாட்டு அளவில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் 385 ஒன்றியங்களில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முதலில் மெழுகுவர்த்தியை ஏற்றி கே என் நேரு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்த கூட்டத்தில் எதிர்காலத்தில் மக்களுக்கு வரும் நோய் தாக்கலை எதிர்க்கும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்தனர். வரும் வாரம் முதல் வடகிழக்கு பருவமழை பொழியும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன் மூலம் வரும் காய்ச்சல் மற்றும் பாதிப்புகள் குறித்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆலோசனை செய்தனர்.
இது குறித்த மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், 389 நடமாடும் மருத்துவ வாகனங்கள் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது என தெரிவித்தார். அத்தோடு புதிய ஐந்து மருந்து கிடங்குகள் கட்டுவது குறித்த கோரிக்கைகளை முதலமைச்சரிடம் தெரிவித்துள்ளதாக கூறினார். தமிழகத்தில் தற்பொழுது வரை மருந்து போதுமான அளவு உள்ளது.
மருந்து தட்டுப்பாடு என்பதே இல்லை என தெரிவித்துள்ளார். தற்பொழுது வரை 437 செவிலியர்களுக்கான காலிப் பணியிடங்கள் உள்ளது. இதற்கு செவிலியர்களை நியமனம் செய்யவும் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்தார். இரண்டு மாதத்தில் இந்த காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என கூறினார்.