கடலோர பகுதியில் 45 முதல் 55 கிமீ வேகத்தில் வீசும்!! கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!! 

0
119
45 to 55 km in coastal area. Blowing fast!! Meteorological department issued heavy rain warning!!
45 to 55 km in coastal area. Blowing fast!! Meteorological department issued heavy rain warning!!

கடலோர பகுதியில் 45 முதல் 55 கிமீ வேகத்தில் வீசும்!! கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!!

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பா.செந்தாமரைக்கண்ணன் தமிழகத்தில் ஜூலை 21 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த மழை கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை எதிரொலியால்  தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. அதனையடுத்து மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

மேலும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதனை தொடர்ந்து சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கும் கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தற்போது மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஜூலை 15 ஆம் தேதி முதல் ஜூலை 16 ஆம் தேதி வரை தமிழ்நாடு மற்றும்  புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமாக மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடம் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் 48 மணி நேரம் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கடலோர பகுதியில் சூறாவளிக்காற்று மணிக்கும் 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசும் என்றும் தெரிவித்துள்ளது.

Previous articleஇன்று தொடங்கவிருக்கும் பிரதோஷம்!! மலை கோவிலுக்கு செல்ல 4 நாட்கள் அனுமதி!!
Next articleஇனி சுற்றுலா நிறுவனங்களில் இது கட்டாயம்!! மாநில அரசின் அதிரடி அறிவிப்பு!!