அரசு ஊழியர்களுக்கு 48 நாட்கள் விடுமுறை! வெளியான புதிய தகவல்!
ஒவ்வொரு வருடம் முடியும் போதும் அடுத்த வருடத்தில் எத்தனை நாட்கள் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை என்ற பட்டியலை ஒவ்வொரு மாநில அரசும் வெளியிடுவது வழக்கம்.அந்தவகையில் மேற்கு வங்க மாநிலத்தில் பணி புரியும் அரசு ஊழியர்களுக்கு அடுத்த வருடத்தின் விடுமுறை தினங்களை தற்பொழுது பட்டியலிட்டு கூறியுள்ளனர்.அந்தவகையில் அடுத்த வருடம் மேற்கு வங்கம் அரசு ஊழியர்களுக்கு 48 நாட்கள் விடுமுறை என கூறியுள்ளனர்.இந்த 48 நாட்களில் 11 நாட்கள் பெரும்பான்மையாக ஞாயிற்றுக்கிழமைகளிலே விடுமுறை வருகிறது.
இதனால் மேற்குவங்க அரசு ஊழியர்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.அதுமட்டுமின்றி அந்த மாநில அரசின் மூத்த அதிகாரி அரசு ஊழியர்களின் பொது விடுமுறை குறித்து பேட்டி ஒன்று அளித்துள்ளார்.அவ்வாறு அவர் பேட்டியில் கூறியதாவது,அரசு வெளியிட்ட இந்த பொது விடுமுறையில் பல குளறுபடிகள் நடந்துள்ளது என கூறியுள்ளார்.அந்தவகையில் பார்க்கும் பொழுது எப்பொழுதும் வருடம்தோறும் சர்ஸ்வதி பூஜை முடிந்த பிறகு தான் விடுமுறை அளிக்கப்படும்.
ஆனால் வரும் ஆண்டு சரஸ்வதி பூஜைக்கு அடுத்த நாள் விடுமுறை அளிக்காமல் முந்தைய நாள் விடுமுறை அளித்துள்ளனர்.இதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன?என்றெல்லாம் கேள்விகளை எழுப்பினார்.அதுமட்டுமின்றி பல நாட்களாக மேற்குவங்க அரசு ஊழியர்கள் சம்பளத்தை உயர்த்த வேண்டும் என பல போராட்டங்கள் நடந்து வருகிறது.அதுமட்டுமின்றி மத்திய அரசு ஊழியர்கள் வாங்கும் ஊதியத்தை விட மேற்கு வங்க அரசு ஊழியர்கள் 30 சதவீதம் குறைவாக வனகுகின்றனர் என்றும் கூறுகின்றனர்.
இதணையெல்லாம் சாமலிக்கும் வகையில் தற்பொழுது மேற்குவங்க அரசு விடுமுறையில் பல குளறுபடிகள் செய்துள்ளதாக கூறுகின்றனர்.அதுமட்டுமின்றி இந்த பொது விடுமுறை நாட்களை கொண்டு எங்களை சமாதானம் செய்திட முடியாது என்றும் பல மேற்குவங்க அரசு ஊழியர்கள் கூறி வருகின்றனர்.அதுமட்டுமின்றி எங்கள் ஊதியத்தை கட்டயாம் உயர்த்த வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.