கனமழை எதிரொலி! இந்த இரண்டு மாவட்டங்களுக்கு மட்டும் இன்று பள்ளி கல்லூரிகள் விடுமுறை!

0
214

வெப்பச்சலனம் காரணமாக, இன்று தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது.

இதற்கிடையில் மதுரை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது இதன் காரணமாக, மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழை நீர் சூழ்ந்து இருக்கிறது. இந்த சூழ்நிலையில், மழையின் காரணமாக, மதுரை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டு இருக்கிறது.

அதேபோன்று நாமக்கல் மாவட்டத்திலும் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது, இதனால் நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை வழங்கப்பட்டு இருக்கிறது இந்த விடுமுறைக்கான அறிவிப்பை அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள் வெளியிட்டு இருக்கிறார்கள்.

Previous articleஅரசு ஊழியர்களுக்கு 48 நாட்கள் விடுமுறை! வெளியான புதிய தகவல்!
Next articleஅதிமுக அலுவலகத்தில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட தொண்டர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here