அடுத்தடுத்து 48 வாகனங்கள் விபத்து! ஒரே நேரத்தில் நடந்த அசம்பாவிதம்!
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நேற்று இரவு ஒன்பது மணியளவில் நவலே பாலத்தில் டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.அப்போது அந்த லாரியானது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.அந்த பாலத்தில் அருகே இருந்த மற்ற வாகனங்களின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.அந்த சம்பவத்தின் போது டேங்கர் லாரியில் இருந்த எண்ணெய் கசிந்தது.அதனால் சாலை முழுவதும் எண்ணெய் பரவியது.அப்போது சாலை வழுக்கும் தன்மையுடையதாக மாறியது.
அதனால் அந்த பகுதியில் வரும் மற்ற வாகனங்கள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது.அப்போது சுமார் 48 வாகனங்கள் மோதி கொண்டதில் பலரும் படுகாயம் அடைந்தனர்.டேங்கர் லாரியானது பல வாகனங்கள் மீது மோதியதில் 30 பேர் காயம் அடைந்தனர்.ஆனால் அதிர்ஷ்ட வசமாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
இந்த விபத்தில் அனைத்து வாகனங்களும் அப்பளம் போல் நசுங்கியது.இந்த விபத்து குறித்து புனே பெருநகர் பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் மீட்புப் குழுவினர் விபத்துக்குள்ளான வாகனங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.மேலும் இந்த விபத்திற்கு காரணம் டேங்கர் லாரி பிரேக் செயலிழந்தது தான் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.