கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 49 பேர் கொரோனாவால் பாதிப்பு!

0
246
#image_title

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 49 பேர் கொரோனாவால் பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது படிப்படியாக உயர்ந்து வருகிறது. இதேபோல கன்னியாகுமரி மாவட்டத்திலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் 10-க்குள் இருந்து வந்த பாதிப்பு, கடந்த 2 நாட்களுக்கு முன்பு 25 ஆக உயர்ந்தது. அதற்கு அடுத்த நாள் 6 ஆக குறைந்தது.

இந்த நிலையில் நேற்று குமரி மாவட்டத்தில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திாி மூலமாகவும், சுகாதார பணியாளர்கள் மூலமாகவும் நடந்த பரிசோதனையில் மொத்தம் 49 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

அதாவது அகஸ்தீஸ்வரம்-9, குருந்தன்கோடு-3, மேல்புறம்-1, முன்சிறை-16, நாகர்கோவில்-6, ராஜாக்கமங்கலம்-4, திருவட்டார்-5, தோவாளை-1, தக்கலை-4 என மொத்தம் 49 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

தற்போது நோய் தொற்றுக்கு ஆளானவர்களையும் சேர்த்து கன்னியாகுமாி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 84 ஆயிரத்து 23 ஆக உயர்ந்துள்ளது.

இதில் பெரும்பாலானோர் லேசான தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்கள் தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களை சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதிப்பு அதிகரித்து வருவதால் பொது வெளியில் நடமாடும் பொதுமக்கள் முக கவசம் அணியும்படி சுகாதார்துறையினர் வலியுறுத்தி இருக்கிறார்கள்.

Previous articleதிமுக உட்கட்சி தேர்தலில் குழப்பம்! உரிமை சீட்டை உரியவரிடம் ஒப்படைக்காதவர்கள் மீது நடவடிக்கை – தலைமை அறிவிப்பு 
Next articleமங்களூரில் 70 வயது மூதாட்டியின் மன உறுதியால் பெரும் ரயில் விபத்து தவிர்ப்பு