நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று GST கவுன்சில் கூட்டம்

0
472
#image_title

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று GST கவுன்சில் கூட்டம்

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று 49 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. ஜிஎஸ்டி கவுன்சிலின் 48வது கூட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் 17ம் தேதி நடைபெற்றது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 49 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தில் பான் மசாலா மற்றும் குட்கா நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் வரி விதிப்பு குறித்து விவாதிக்கப்பட உள்ளது. 

மேலும் ஆன்லைன் கேமிங், கேசினோக்கள் மற்றும் குதிரைப் பந்தயம் ஆகியவற்றுக்கான ஜிஎஸ்டியும் விவாதத்திற்கு வர வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின் நடைபெறும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் என்பதால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

 

 

Previous articleஅதானி நிறுவன முறைகேடுகளை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு- உச்ச நீதிமன்றம் அதிரடி 
Next articleஇந்தியாவில் இருந்த 2 ட்விட்டர் அலுவலகங்கள் மூடல்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here