கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே இருக்கின்ற கீழக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்நாதன், இவருடைய மனைவி லட்சுமி இவர்களுடைய மகன்கள் அபி மற்றும் அஸ்வத் என்ற சூழ்நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தான், அந்த சமயத்தில் திடீரென்று காணாமல் போய்விட்டார் .இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பல பகுதிகளில் தேடியும் சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுதொடர்பாக பன்ருட்டி காவல் நிலையத்தில் புகார் வழங்கப்பட்டது, அதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை செய்தனர், இந்த சூழ்நிலையில், நேற்று காலை கீழ கீழக்கொல்லையில் இருக்கின்ற ஒரு முந்திரி தோப்பில் சிறுவன் அஸ்வத் ரத்த காயங்களுடன் பிணமாக மீட்கப்பட்டான் என்று சொல்லப்படுகிறது.
காவல்துறையின் விசாரணையில் சிறுவன் வீட்டின் அருகில் வசித்து வரும் முருகவேல் மகள் ரஞ்சிதா என்பவர் முகத்தில் அடித்தும், கழுத்தை நெரித்தும், கொலை செய்து இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து ரஞ்சிதாவை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் காவல்துறையில் வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவித்ததாவது,
தன்னுடைய பெற்றோருக்கும், அஸ்வத்தின் பெற்றோருக்கும், இடையே நிலத்தகராறு இருந்து வந்தது அதற்கு பழிவாங்குவதற்காக தான் சிறுவன் அஸ்வத்தை கொலை செய்ய திட்டமிட்டேன், அதன் அடிப்படையில் அவனை முந்திரி தோப்புக்குள் அழைத்துச் சென்றேன், அங்கே அவனுடைய முகத்தை தரையில் அழுத்தி தேய்த்தேன் இதில் அவனுடைய முகத்தில் காயம் உண்டானது. அதோடு கழுத்தை நெரித்து சிறுவனை கொலை செய்தேன் என்று வாக்குமூலம் வாங்கியிருக்கிறார் ரஞ்சிதா.