5 நாட்களில் கரும்புள்ளி, கருமை மறைந்து முகம் மின்னும்!

Photo of author

By Kowsalya

முக அழகு பெற வேண்டும் என்று எந்தப் பின்னும் விரும்பாமல் இருக்க மாட்டாள். ஆனால் என்னதான் நாம் முகத்திற்கு அழகு சேர்க்க வேண்டும் என்று நினைத்தாலும் அடிக்கடி நம்மை கரும்புள்ளிகள் கருமை முகப்பருக்கள் வந்து வந்து சேரும்.

 

பியூட்டி பார்லர்களை நம்பி போய் ஏமாற வேண்டாம். அற்புதமான குறிப்புகள் உள்ளன அதனை தொடர்ந்து நீங்கள் செய்துவரும் பொழுது நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு முகம் பளபளக்கும்.

முக அழகிற்கு மட்டும் இல்லாமல் கழுத்தை சுற்றி கருமையான பகுதிகள் இருக்கும் அல்லவா அதற்கு கூட இதனை தொடர்ந்து நீங்கள் அப்ளை செய்து வரும் பொழுது மாற்றத்தை உணரலாம். மூக்கின் இரு பக்கமும் கருப்பாக இருத்தல், வாயை சுற்றி கருப்பாக இருத்தல் ஆகிய அனைத்து பிரச்சனையும் சரியாகும்.

 

இது நீங்கள் பயன்படுத்தி வர உங்களால் மாற்றத்தை உணர முடியும்.

 

தேவையான பொருட்கள்:

 

1. காபி பவுடர் இன்ஸ்டன்ட்

2. சர்க்கரை

3. தயிர்

4. தேன்

 

செய்முறை:

 

1. ஒரு பவுலை எடுத்துக் கொள்ளவும்.

2. அதில் கால் டீஸ்பூன் அளவிற்கு இன்ஸ்டன்ட் காபி பவுடரை சேர்த்துக் கொள்ளவும்.

3. பிறகு கால் ஸ்பூன் அளவுக்கு சர்க்கரையை சேர்த்துக் கொள்ளவும்.

4. ஒரு ஸ்பூன் அளவிற்கு தயிரை சேர்த்துக் கொள்ளவும். கலந்து விடவும்.

5. பின் ஒரு ஸ்பூன் அளவுக்கு தேனை சேர்த்துக் கொள்ளவும்.

6. நன்றாக அனைத்து பொருட்களும் சேர்த்து கலந்து கொள்ளவும்.

7. இதை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் பூசவும்.

8. 20 நிமிடம் கழித்து ஒரு லைட்டாக கையை வைத்து முகம் மற்றும் கழுத்து பகுதியை மசாஜ் செய்து சாதாரண தண்ணீர் கொண்டு கழுவி விடவும்.

 

தொடர்ந்து நீங்கள் இரவு நேரங்களில் அப்ளை செய்து பயன்படுத்தி வர நிச்சயமாக உங்களால் இரண்டே நாட்களில் மாற்றத்தை உணர முடியும்.