முடிச்சூரில் 5 ஏக்கர் பரப்பளவில் ஆம்னி பஸ் நிலையம்!! முதல்வர் இன்று திறந்துவைத்தார்!!

Photo of author

By Vinoth

சென்னை: வண்டலூர் அடுத்து உள்ள கிளாம்பாக்கத்தில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் கலைஞர் பன்னாட்டு பேருந்து முனையம் சுமார் 400 கோடி மதிப்பில் கட்டப்பட்டது. இந்த பேருந்து நிலையம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார் முதல்வர். மேலும் இந்த பேருந்து நிலையம் சென்னையில் இருந்து தமிழகம் முழுவதும் மற்றும் வெளியூர் செல்லும் பஸ்கள் செல்ல கூடிய வகையில் அமைக்கப்பட்டது. ஆனால் அதில் தனியார் ஆம்னி பஸ்கள் அங்கிருந்தது இயக்கப்பட்டு.

இந்த தனியார் ஆம்னி பஸ்கள் கிளாளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தது இயக்குவதால் பல நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டு வந்தது. அந்த சிக்கல்கள் கிளாளம்பாக்கம் பஸ் நிலையத்தில் ஆம்னி பஸ் டிரைவர், நடத்துனர், மற்றும் உதவியாளர்கள் தங்குவதற்கு முறையாக எந்த ஏற்பாடுகள் செய்யவில்லை. அதனை முறையாக தமிழக அரசுக்கு எடுத்து ஆம்னி பஸ் உரிமையாளர் சங்கம் கூறியது. அந்த கோரிக்கை ஏற்று தமிழக அரசு அதற்காக வண்டலூர் வெளிவட்டச் சாலை முடிச்சூர் அருகில் சுமார்  5 ஏக்கர் பரப்பளவில் ஆம்னி பஸ் நிலையம் கட்டப்பட்டது.

மேலும் இந்த பஸ் நிலையத்தில் ஒரே சமயத்தில் 117 பஸ்கள் நிறுத்தும் அளவிற்க்கு பஸ் நிலையம் கட்டப்பட்டது. அங்கு டிரைவர், நடத்துனர் மற்றும் கிளீனர் என 100 பேர் தங்ககூடிய இரண்டு பெரிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த பஸ் நிலையம் கட்டுமான பணிகள் முடிந்த நிலையில் முதல்வர் இன்று காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.