கவர்ச்சி காட்டி கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்த 5 நடிகைகள்!

0
54
#image_title

கவர்ச்சி காட்டி கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்த 5 நடிகைகள்!

1960களிலிருந்து 2000ம் ஆண்டு வரைக்கும் திரைப்படத்தில் கவர்ச்சிக்கென்று நடனமாடுவதற்கு கவர்ச்சி நடிகைகள் இருந்தார்கள். அவர்கள் மட்டும்தான் கவர்ச்சியில் நடனம் ஆடினார்கள். சிலுக்கு, அனுராதா, ஜெயமாலினி இவர்கள் அப்படிதான் கவர்ச்சி பாடல்களுக்கு நடனமாடினார்.

ஆனால், அதற்கு அடுத்த காலக்கட்டத்தில் நடிகைகளே கவர்ச்சியில் நடனமாட ஆரம்பித்தனர். அதனால் கவர்ச்சி நடிகைகளுக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் போனது.

அப்படி பிரபல நடிகைகள் கவர்ச்சியில் நடனமாடிய 5 நடிகைகளைப் பற்றி பார்ப்போம் –

தமிழ் சினிமாவில் 80களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ரம்யா கிருஷ்ணன். இவர் பல படங்களில் குடும்ப பாங்கான கதாபாத்திரத்திலேயே நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் இவருக்கு பட வாய்ப்பு குறைந்தது. இதன் பிறகு சிம்பு நடித்த ‘குத்து’ படத்தில் வந்த ‘போட்டுத்தாக்கு’ பாடலுக்கு குத்து நடனமாடினார். அதேபோல், சூர்யா நடித்த காக்க படத்திலும் ‘தூது வருமா’ பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடினார்.

அதேபோல் தன் இடுப்பை அழகை காட்டி ரசிகர்களை கட்டிப்போட்டவர் நடிகை சிம்ரன். இவருக்கும் ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்பு குறைந்தது. அப்போது, விஜய் நடிப்பில் வெளியான ‘ஆள்தோட்ட பூபதி நானடா’ பாடலுக்கு குத்தாட்டம் போட்டு ரசிகர்களை திணறடித்தார்.

நயன்தாராவும், விஜய் நடித்த சிவகாசி படத்தில் வரும் ‘கோடம்பாக்கம் ஏரியா’ பாடலுக்கு குத்து நடனம் ஆடினார்.

அதேபோல் தமன்னா ஜெயிலர் படத்தில் காவாலா பாடலுக்கு குத்து நடனம் ஆடியுள்ளார். இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

நடிகை சமந்தாவும் ‘புஷ்பா’ படத்தில் ‘ஊ சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா மாமா’ பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடினார்.

இப்படி நடிகைகள் கவர்ச்சி பாடலுக்கு நடனமாடி சினிமா வாய்ப்புகளை பெற்றனர்.