தற்பொழுது பெரும்பாலானோர் மன அழுத்த பிரச்சனைக்கு ஆளாகி வருகின்றனர்.வேலைப்பளு,தூக்கமின்மை,பணப் பிரச்சனை,உடல் நலக் கோளாறு போன்ற காரணங்களால் அதிக மன அழுத்தத்தை சந்திக்கின்றனர்.
ஓவர் டிப்ரஷன் உயிருக்கு ஆபத்தாகிவிடும்.அதிக மன அழுத்தத்தால் தற்பொழுது அதிக உயிரிழப்புகள் ஏற்படுகிறது.குழந்தைகள்,பெரியவர்கள் என்று மன அழுத்தத்தை எதிர்கொள்ளாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.
இன்று மன அழுத்தம் அனைவராலும் தவிர்க்க முடியாத ஒரு பாதிப்பாக இருந்து வருகிறது.ஆரம்ப நிலையில் மன அழுத்தத்தை கட்டுப்படுத்தாவிட்டால் உடல் ஆரோக்கியம் மோசமாகிவிடும்.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான மன அழுத்தப் பிரச்சனை ஏற்படுகிறது.இந்த மன அழுத்தம் எதிர்மறையான பாதிப்புகளை மட்டுமே உண்டுபண்ணும்.
அதிக மன அழுத்தம் இதயம் சம்மந்தப்பட்ட பாதிப்புகளை அதிகமாக்கிவிடும்.எனவே மன அழுத்தத்தை கட்டுப்படுத்த இங்கு சொல்லப்பட்டுள்ள வழிகளை பின்பற்றுங்கள்.
1)முதலில் இருண்ட அதாவது அதிக வெளிச்சம் இல்லாத இடத்தில் இருப்பதை தவிருங்கள்.உங்கள் அறையில் சூரிய வெளிச்சம் படும்படியாக பார்த்துக் கொள்ளுங்கள்.
2)உங்கள் செல்லப்பிராணிகளுடன் நேரத்தை செலவிடுங்கள்.செல்லப்பிராணிகளுடன் விளையாடும் பொழுது மன அழுத்தம் குறையும்.மனதிற்கு புத்துணர்வு கிடைக்கும்.
3)உங்கள் உணர்வுகளை பேப்பரில் எழுதுங்கள்.மனதில் தோன்றுவதை எழுதினால் மன அழுத்தம் குறையும்.
4)தினமும் காலையில் 15 நிமிடங்களுக்கு தியானம் செய்யுங்கள்.தியானம்,யோகா போன்றவை மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.
5)உங்களுக்கு பிடித்த மியூசிக் கேளுங்கள்.சிறிது நேரம் ஓய்வெடுங்கள்.கோபத்தை வெளிக்காட்டாமல் சிறிது நேரம் அமைதியாக இருங்கள்.மன அழுத்தம் இருக்கும் பொழுது வெயில் நடைபயிற்சி செய்யுங்கள்.தண்ணீர் குடிக்க வேண்டும்.மூச்சை நன்றாக இழுத்துவிட வேண்டும்.இதையெல்லாம் செய்து வந்தால் மன அழுத்தம் கட்டுப்படும்.