இன்றைய காலத்தில் ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை பின்பற்றுபவர்கள் மிகவும் குறைவானவர்களே.நல்ல பழக்கங்கள் உடல் மற்றும் மணம் ஆகிய இரண்டையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.ஆனால் நம் அன்றாட வாழ்வதில் செய்யும் சில தவறுகள் நமது உயிரை மெல்ல மெல்ல பறித்துவிடும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
நம் உயிரை மெல்ல மெல்ல பறிக்கும் மோசமான பழக்க வழக்கங்கள்:
1)சிறுநீரை அடக்கி வைத்தல்
வேலைப்பளு காரணமாக சிறுநீர் வெளியேற்ற கூட நேரம் இல்லாமல் இருக்கின்றனர்.சிறுநீர் வந்தால் அவற்றை அடக்கி வைக்காமல் உடனடியாக வெளியேற்றிவிட வேண்டும்.நாம் சிறுநீரை அடக்கி வைத்தால் நாளடைவில் சிறுநீரக கல் உருவாகிவிடும்.சிறுநீரை அடக்கி வைத்தால் நாளடைவில் சிறுநீரகம் பாதிக்கப்பட்டுவிடும்.
2)படுக்கையில் மொபைல் வைத்து படுத்தல்
இரவில் நெடு நேரம் மொபைல் பயன்படுத்தல்,படுக்கைக்கு அருகில் மொபைல் வைத்து பயன்படுத்துதல் போன்ற காரணங்களால் உடலில் கதிர்வீச்சு நுழைந்து பாதிப்பு உண்டாக்கிவிடும்.
3)நேரம் கடந்து உறங்குதல்
இன்று பெருமபாலானோர் இரவில் நேரம் கடந்து உறங்குகின்றனர்.இதனால் மன அழுத்தம்,தலைவலி போன்ற பாதிப்புகள் ஏற்படும்.நேரம் கடந்து உறங்கினால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.இதயம் சம்மந்தப்பட்ட நோய் பாதிப்புகள் வர இதுவும் ஒரு காரணமாகும்.
4)தண்ணீர் பருகாமை
உடலில் நீர்சது குறையாமல் இருக்க வேண்டும்.இதனால் உடலுக்கு தேவையான தண்ணீரை அவசியம் பருக வேண்டும்.ஆனால் இன்று பெரும்பாலான மக்கள் தண்ணீர் பருகுவதையே மறக்கின்றனர்.உடலில் நீர்ச்சத்து குறைந்தால் உடல் சோர்வு,சிறுநீரகப் பிரச்சனை,தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனை ஏற்படும்.
5)இரவில் அதிக உணவு உட்கொள்ளுதல்
இன்று பெரும்பாலனோர் காலை உணவை தவிர்த்துவிட்டு இரவு உணவை அதிகமாக எடுத்துக் கொள்கின்றனர்.இதனால் செரிமானப் பிரச்சனை,வயிற்று வலி,வயற்றுப்போக்கு,மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படும்.
இரவில் வயிறு முட்ட சாப்பிட்டால் தூக்கம் கெட்டுவிடும்.அது மட்டுமின்றி உடலில் கெட்ட கொழுப்பு சேர்ந்து உடல் பருமனுக்கு வழிவகுத்துவிடும்.எனவே இதுபோன்ற கெட்ட பழக்கங்களை இனி தவிர்த்துவிடுங்கள்.