சுட்டெரிக்கும் வெயில் காலத்தில் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய ஐந்து ஆரோக்கிய பானங்கள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளது.
1)மோர்
தயிரில் இருந்து தயாரிக்கப்படும் மோர் குளிர்ச்சித் தன்மை கொண்ட பானமாகும்.இந்த பசு மோரை காலை நேரத்தில் ஒரு கிளாஸ் குடித்து வந்தால் உடல் சூடாகாமல் இருக்கும்.இது கொளுத்தும் வெயிலுக்கு ஏற்ற சிறந்த பானம்.
வெயில் காலத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் இருக்க மோர் குடிக்கலாம்.இதில் இருக்கின்ற புரோபயாட்டிக் குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
2)இளநீர்
வெயிலை தணிக்க பெரும்பாலானோர் இளநீர் குடிக்கின்றனர்.இளநீர் இயற்கை குளிர்ச்சி நிறைந்த பொருள்.இதை தினமும் குடித்து வந்தால் வெயில் கால நோய்கள் உங்களை அண்டாமல் இருக்கும்.
3)தர்பூசணி சாறு
நீர்ச்சத்து,வைட்டமின் சி,மெக்னீசியம்,இரும்பு,தாமிரம் போன்ற பல நன்மைகளை கொண்டிருக்கிறது.இந்த தர்பூசணி பழத்தை ஜூஸாக செய்து குடித்தால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.தர்பூசணி சாறு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
கோடையில் தர்பூசணி சாறு குடித்தால் சரும ஆரோக்கியம் மேம்படும்.தர்பூசணி சாறு தலைமுடி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
4)க்ரீன் டீ
தினமும் ஒரு கப் க்ரீன் டீ குடித்து வந்தால் கோடை காலத்தில் நாள் முழுவதும் உடல் புத்துணர்வுடன் இருக்கலாம்.
5)எலுமிச்சை ஜூஸ்
வைட்டமின் சி சத்து எலுமிச்சையில் அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.இந்த எலுமிச்சை ஜூஸை ஒரு கிளாஸிற்கு பிழிந்து தண்ணீர் கலந்து குடித்தால் உடல் புத்துணர்வுடன் இருக்கும்.கோடை கால சரும பாதிப்புகள் வராமல் இருக்க இந்த எலுமிச்சை ஜூஸை குடிக்கலாம்.