சுந்தர்.சி இயக்கத்தில் படுதோல்வியை சந்தித்த 5 படங்கள்!!

0
51
#image_title

சுந்தர்.சி இயக்கத்தில் படுதோல்வியை சந்தித்த 5 படங்கள்!!

இயக்குநரும், நடிகருமான சுந்தர். சி அவர்கள் இயக்கத்தில் வெளியாகி படுதோல்வியை சந்தித்த 5 படங்களை பற்றி இங்கு பார்க்கலாம்…

இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் ஒரு பாடகராவும் கூட தமிழ் திரையுலகில் சுந்தர். சி அவர்கள் வலம் வந்துள்ளார். பல வெற்றி படங்களையும் தந்து சுந்தர். சி அவர்கள் முறைமாமன் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். முதல் படமே வெற்றி படமாக அவருக்கு அமைந்தது. அதைதொடர்ந்து, உள்ளதை அள்ளித்தா, ஜானகிராமன், அருணாச்சலம், மேட்டுக்குடி என் தொடர்ந்து 100நாட்கள் ஓடிய வெற்றி படங்கள் தான். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக கருதப்படும் ரஜினி, கமலஹாசன், அஜித், சிம்பு ஆகியோர் வைத்து படங்கள் இயக்கிய இயக்குநரும் சுந்தர்.சி அவர்கள் தான்.

அப்படிப்பட்ட இயக்குநர் சுந்தர். சி அவர்கள் பல தோல்வி படங்களையும்; சில படுதோல்வி படங்களையும் தந்துள்ளார்.

1) தகதிமிதா, 20205ஆம் ஆண்டு படம் வெளியானது. அங்கிதா, யுவகிருஷ்ணா, விவேக், இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்தனர் இருப்பினும், படத்தின் திரைக்கதை மெதுவாக சென்றதால் ரசிகர்களுக்கு படமும் பிடிக்கவில்லை. படமும் படுதோல்வியை சந்தித்தது.

2) ஆக்‌ஷன், படம்

நடிகர் விஷால், நடிகை தமன்னா நடித்த ஆக்‌ஷன் என்னும் படம் 2019ஆம் ஆண்டு வெளியானது.இப்படம் படுதோல்வியை சந்தித்தது.

3) “காபி வித் காதல்” 2022ஆம் ஆண்டு வெளியானது. நடிகர், ஜெய், ஜீவா, அமிர்தா ஐயர் என பல பிரபலங்கள் நடித்து இருந்தாலும் படத்தில் கதை ஏதும் பெரிதாக இல்லாததால் படம் படுதோல்வியை சந்தித்தது.

4) சின்னா : 2005 ஆண்டு இயக்குநர் சுந்தர். சி அவர்களின் இயக்கத்தில் 3படங்கள் வெளியாகின. இதில் ஒருபடம் தான் ‘சின்னா’. படத்தில் எந்தவொரு லாஜிக்-ம் இருக்காது. நடிகர் அர்ஜூன், மன்சூர் அலிகான், நடிகை சினேகா ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர்.

5) 2001ம் ஆண்டு வெளியான படம் “ரிஷி”. இப்படத்தில் நடிகர் சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். இப்படம் வணிக ரீதியாக வெற்றிப்படமாக அமையவில்லை.

author avatar
Parthipan K