12 கோடி ரூபாய் செலவில் உருவான அதிபரின் பீஸ்ட் கார்!!! இவ்வளவு சிறப்பு இருக்கின்றதா இந்த பீஸ்ட் காரில்!!!

0
42
#image_title

12 கோடி ரூபாய் செலவில் உருவான அதிபரின் பீஸ்ட் கார்!!! இவ்வளவு சிறப்பு இருக்கின்றதா இந்த பீஸ்ட் காரில்!!!

12 கோடி ரூபாய் செலவில் அமெரிக்க அதிபருக்கு என்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பீஸ்ட் கார் அனைவருடைய கவனத்தையும் பெற்று வருகின்றது. மேலும் இந்த பீஸ்ட் காரில் பல சிறப்பு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் உலகத்தில் எந்த நாட்டுக்குச் சென்றாலும் அங்கு சாலை வழியாக செல்வதற்கு ஒரே பதிவு எண் கொண்ட இரண்டு கார்கள் விமானம் மூலமாக கொண்டு செல்லப்படும். அமெரிக்க அதிபர் அந்த பீஸ்ட் காரில் மட்டும் தான் செல்வார். பாதுகாப்பு உள்பட பல காரணங்களை காட்டி அமெரிக்க அரசு இந்த பழக்கத்தை நடைமுறையாக வைத்துள்ளது.

அதுபோல ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்கள் அவருடைய பீஸ்ட் காரில் இந்திய சாலைகளில் பயணம் செய்தார். டெல்லியில் வலம் வந்த அமெரிக்க அதிபருடைய பீஸ்ட் கார் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சமீபத்திய பீஸ்ட் கார் மாடலை ஜி.எம் என்று அழைக்கப்படும் பிரபல ஜெனரல் மோட்டர்ஸ் நிறுவனம் கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்தது. இந்த பீஸ்ட் காரில் உள்ள சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

* இந்த பீஸ்ட் காரின் எடை 6800 கிலோ முதல் 9100 கிலோ வரை இருக்கும்.

* இந்த பீஸ்ட் காரில் ஏழு பேர் பயணம் செய்யலாம். பீஸ்ட் காரின் நீளம் 18 அடி ஆகும்.

* பீஸ்ட் காரில் பாதுகாப்பு அம்சங்கள் அதிகம் உள்ளது. அவசர காலத்திற்காக அதிபரின் இரத்த வகை அதாவது பிளட் குரூப் இந்த காரில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும்.

* ரசாயனங்கள் மூலமாக தாக்குதல் நடத்தினாலும் காருக்குள் இருக்கும் அதிபருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்த பீஸ்ட் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

* பீஸ்ட் காரின் டயர்கள் பஞ்சர் ஆனாலும் கார் ஓடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இருட்டாக இருக்கும் பகுதியை பார்க்கும் கருவிகள், திடீர் தாக்குதலில் இருந்து தப்பிக்கும் வகையில் புகையை ஏற்படுத்தும் கருவி, எதிரிகளின் கார்கள் பின் தொடர்ந்து வருவதை தடுக்க எண்ணையை பீய்ச்சி அடிக்கும் கருவி ஆகியவை பீஸ்ட் காரில் உள்ளது.

* அலுமினியம், எஃகு, செராமிக் ஆகியவற்றை பயன்படுத்தி பீஸ்ட் காரானது கவச வாகனமாக தயாரிக்கப்பட்டு உள்ளது.

* ராக்கெட் குண்டுகள், துப்பாக்கி குண்டுகள், கண்ணீர் புகை குண்டுகள் ஆகியவற்றை செலுத்தும் வசதிகளும் இந்த பீஸ்ட் காரில உள்ளது.

* பீஸ்ட் காரின் வெளிப்புற தகடுகள் 8 இன்ச் தடிமன் கொண்டுள்ளது. பீஸ்ட் காரின் கண்ணாடிகள் 130 மி.மீ தடிமன் கொண்டது. மேலும் இந்த காரின் கண்ணாடிகள் பல அடுக்குகள் கொண்டவையாக இருக்கின்றது.

* பீஸ்ட் காரின் கதவுகள் போயிங்757 விமனத்தில் உள்ள கதவுகளின் எடைக்கு சமமாக இருக்கும். எதிரகள் கார் கதவை திறக்க முடியாத அளவிற்கு பீஸ்ட் காரின் கதவின் கைப்பிடியில் 120 வோல்ட் மின்சாரம் பாய்ச்சி ஷாக் கொடுக்கும் வசதியும் உள்ளது.

* அதிபர் செல்லும் கார் அணி வகுப்பில் ஒரே பதிவு எண் கொண்ட இரண்டு பீஸ்ட் கார்கள் செல்கின்றது.

* இந்த பீஸ்ட் காரின் விலை 1.5 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். இந்திய மதிப்பில் 12 கோடியே 45 லட்ச ரூபாய் ஆகும். ஆனால் பீஸ்ட் காரின் ஆராய்ச்சிக்கும் மேம்பாட்டுக்கு மட்டுமே ஜி.எம் நிறுவனம் 124 கோடி ரூபாயை செலவு செய்து உள்ளது.