ஆப்கன் விமான நிலையத்தில் உயிரிழந்த 5 நபர்கள்! காரணம் என்ன?

Photo of author

By Hasini

ஆப்கன் விமான நிலையத்தில் உயிரிழந்த 5 நபர்கள்! காரணம் என்ன?

ஆப்கானிஸ்தான் முழுவதும் தலிபான்கள் கட்டுக்குள் வந்துவிட்டது. நேற்று இரவு முதலே  காபூல் விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான மக்கள், தங்களது சொந்த நாடுகளுக்குத் செல்ல திரண்டனர். அதே போல் விமானங்களில் ஏறுவதற்காகவும் ஒரே நேரத்தில் மக்கள் அனைவரும் போட்டி போட்டு முந்திக்கொண்டு கூடியதால் அங்கு பெரும் கலவரம் ஏற்பட்டது.

உங்களுக்கு தெரியுமல்லவா அப்படி நடக்கும்போது என்னவெல்லாம் நடக்குமென்று இதையடுத்து காபூல் விமான நிலையத்தை இருந்த அமெரிக்க படையினர் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக முதலில் ஒரு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து விமான நிலையமும் மூடப்பட்டது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்ட நிலையில் காபூல் விமான நிலையத்திலிருந்து 5 பேர் சடலங்களாக எடுத்துச் செல்லப்பட்டதாக அங்கிருந்த மக்கள் சிலர் தெரிவித்தனர் என்று ராய்ட்டர்ஸ் நிறுவனம் ஒரு செய்தி வெளியிட்டு உள்ளது. இருந்தாலும் அவர்கள் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனரா? அல்லது கூட்டத்தில் சிக்கியதால் உயிரிழந்தனரா? என்ற விவரம் தெரியவில்லை என்றும் கூறப்பட்டு உள்ளது.